இந்தியாவில் கொரோனா பாதிப்பு புதிய உச்சம்: ஒரே நாளில் 23 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி…

Read Time:2 Minute, 4 Second

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. இதனால் தினந்தோறும் இந்த நோய்த்தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்பவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அந்த வகையில் இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் நேற்று கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டு இருக்கிறது.

ஒரே நாளில் 22,771 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. இதனால் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 6,48,315 உயர்ந்துள்ளது.

இதில் 60.73 சதவீதம் பேர் அதாவது, 3,94,227 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பிவிட்ட நிலையில்,2,35,433 பேர் மருத்துவ்மனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், ஒரே நாளில் 442பேரின் உயிரையும் கொரோனா பறித்துள்ளது. இதனால் நாட்டில் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 18,655 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட முதல் 3 மாநிலங்களாக மராட்டியம், தமிழகம் மற்றும் டெல்லி இருந்து வருகிறது. இதில் மராட்டிய மாநிலத்தில் மட்டும் 1,92,990 பேருக்கு நோய்த்தொற்று உறுதியாகி இருக்கிறது. தமிழகத்தில் புதிதாக நோய்த்தொற்று உறுதியானவர்களுடன் சேர்த்து கொரோனா பாதிப்பு 1 லட்சத்தை தாண்டியுள்ளது. 1,02,721 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளது. தேசிய தலைநகரான டெல்லியில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 94,695 ஆக உள்ளது.
இந்தியா உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கையில் ரஷியாவை நெருங்கியுள்ளது.