இந்தியாவில் இரண்டு கொரோனா தடுப்பூசி மருந்தை மனிதர்களுக்கு செலுத்த அனுமதி…

Read Time:1 Minute, 12 Second

இந்தியாவில் கொரோனா வைரசை தடுக்க பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கிய ‘கோவேக்சின்’ தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி சோதிக்க இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்து உள்ளது.

இந்த நிலையில் ஜைடஸ் மருந்து நிறுவனம் மற்றொரு தடுப்பூசி மருந்தை உருவாக்கி உள்ளது.
‘ஜைகோவ்-டி’ என்று அழைக்கப்படுகிற இந்த தடுப்பூசியை விலங்குகளுக்கு செலுத்தி சோதித்து பார்க்கப்பட்டு உள்ளது. அதில், நல்ல முடிவு கிடைத்துள்ளது. இதையடுத்து மனிதர்களுக்கு செலுத்தி பார்ப்பதற்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் அனுமதி அளித்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்து உள்ளது.

இநத நிறுவனம், கேடிலா ஹெல்த்கேர் நிறுவனத்தின் ஒரு அங்கமாகும். ஜைகோவ்-டி தடுப்பூசி மருந்தை மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் பரிசோதனை இந்த மாதமே தொடங்கி விடும்.