ஆன்-லைனில் படிக்கிறேன் என பப்ஜி விளையாடிய சிறுவன்… அப்பாவின் வங்கி கணக்கிலிருந்த ரூ. 16 லட்சம் காலி…!

Read Time:4 Minute, 18 Second
Page Visited: 217
ஆன்-லைனில் படிக்கிறேன் என பப்ஜி விளையாடிய சிறுவன்… அப்பாவின் வங்கி கணக்கிலிருந்த ரூ. 16 லட்சம் காலி…!

இன்றைய டீனேஜ் பிள்ளைகள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருப்பது PlayerUnknown’s Battlegrounds என பப்ஜி கேம்தான். இதுபோன்று குழந்தைகளை மயக்கும் பல்வேறு கேம்கள் வலைதளங்களில் வலம் வருகின்றனர். இந்த கேம் மீதான மோகம் அவர்களை புதைக்குழியில் சிக்கியது போன்று செய்துவிடுகிறது.

கேம்மை தொடர்ந்து விளையாட தேவையான உபகரணம் வாங்கலாம் என்ற விளம்பரம் அதிலே செய்யப்படும். அதற்காக பணம் செலுத்த வேண்டும். இப்படி கேம் மீது மோகம் கொண்டவர்கள் வெறும் வேடிக்கைக்காக ஆயிரக்கணக்கில் பணத்தை அதில் செலவு செய்கிறார்கள். இப்படி பஞ்சாப்பில் ஒரு சிறுவன் பப்ஜியில் பணத்தை விட்டதால் தந்தையின் மருத்துவ செலவிற்கு வைத்திருந்த ரூ. 16 லட்சமும் வீணானதுதான் மிச்சமாகும்.

17 வயதாகும் அந்த சிறுவன் கொரோனா ஊரடங்கில் வீட்டில் ஆன்-லைன் மூலம் படிப்பதாக கூறி பெற்றோரின் ஸ்மார்ட் போனில் பப்ஜி விளையாடியுள்ளான். சிறுவன் தந்தைக்கு உடல் நலம் சரியில்ல்லை. இதற்கு வைத்தியம் பார்ப்பதற்காக சுமார் ரூ. 16 லட்சத்தினை வங்கி கணக்கில் வைத்திருந்து உள்ளார். மணைவின் பிஎப் பணத்தையும் அதிலேயே போட்டு வைத்து இருக்கிறார்.

இந்த வங்கி கணக்கு தொடர்பான அனைத்து தரவுகளையும் தன்னுடைய மொபைல் போனிலேயே வைத்திருந்து உள்ளார்.

இதனை தெரிந்துக்கொண்ட சிறுவன் பப்ஜி விளையாடுகளில் விளம்பரங்களில் மயங்கி தந்தையின் பணத்தினால் விளையாடுவதற்கு ஆயுதங்களை வாங்கியிருக்கிறான். வங்கியிலிருந்து பணம் செல்வதை பெற்றோர்களிடம் மறைக்க அவ்வப்போது செல்போன் களில் வரும் குறுஞ்செய்தியை நீக்கியுள்ளான். இறுதில் வங்கி சென்று பெற்றோர் ஸ்டேட்மெண்ட் வாங்கிய போது அவர்களுடைய கணக்கில் நயா பைசா இல்லாதது தெரியவந்து உள்ளது. விசாரித்ததில் மகனின் டாகால்டி வேலை அனைத்தும் தெரியவந்து உள்ளது.

இதனையடுத்து கடும் கோபம் அடைந்த தந்தை மகனை நீ படித்தது போதும் என அங்குள்ள மோட்டார் சைக்கிள் ரிப்பேர் பார்க்கும் கடையில் வேலையில் சேர்ந்து உள்ளார்.

உலகம் முழுவதும் பப்ஜி கேம் அதிகமாக பணம் சம்பாதிக்கும் கேமாக இருக்கிறது. இதற்காக அதன் வலையில் சிக்குபவார்களின் குடலை எப்படி உருவுகிறது என்பதற்கு இந்த செய்தியே சாட்சியாகும்.

ஏற்கனவே பப்ஜி கேம் குழந்தைகள் மத்தியில் கொடூரத்தின் விதையை விதைக்கிறது என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது. சீன செயலிகள் தடை செய்யப்பட்டதும் பப்ஜியையும் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து இருக்கிறது. பப்ஜி மோகத்தில் இருந்து குழந்தைகளை விடுவிக்க முடியாமல் பெற்றோர்கள் தவித்து வருகிறார்கள். கண்டிக்கும் பட்சத்தில் கொலை, தற்கொலை என்ற விபரீதத்தில் முடிகிறது. எனவே, உங்களுடைய குழந்தைகள் அடிமையாவதை தடுத்து நிறுத்துங்கள். இது பப்ஜிக்கு மட்டுமல்ல செல்போன் பயன்பாட்டுக்கும் பொருந்தும்…

0 0
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %