சிறுமி வன்கொடுமை: பிரச்சினைகள் ஹேஷ்டேக்கில் வந்தால் தான் நீதி கிடைக்குமா…? சாய் பல்லவி காட்டம்

Read Time:3 Minute, 48 Second

புதுக்கோட்டையில் உள்ள அறந்தாங்கி அருகே 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் கோபத்தையும் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. மனித போர்வையில் நடமாடும் மிருகங்களால் சிறார்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாவதும் கொல்லப்படுவதும் தொடர் சம்பவங்களாகவே இருக்கிறது. இந்த மிருகங்கள் வதைக்கப்பட வேண்டியதுள்ளது.

இந்நிலையில் புதுக்கோட்டை சிறுமி படுகொலைக்கு நீதிக்கோரி பலரும் டுவிட்டரில் தங்களுடைய கருத்துக்களை முன்வைத்தனர். பலரும் இந்த சம்பவத்தை பலரும் கண்டித்து வருகிறார்கள். இந்த படுகொலைக்கு கொலைக்கு நீதி வேண்டும் என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்டாகி வருகிறது. குற்றவாளிகளுக்கு தலையாய தண்டனையை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து இருக்கிறது. நடிகைகள் பலர் இந்த சம்பவத்தை கண்டித்து உள்ளனர்.

இதுதொடர்பாக் நடிகை சாய்பல்லவி தனது டுவிட்டர் பக்கத்தில், “சமூகத்தில் பல கொடூரக் குற்ற சம்பவங்கள் நடக்கின்றன. அவற்றை வெளிப்படுத்த நாம் ஹேஷ்டேக்கை பயன்படுத்த வேண்டி உள்ளது. அப்படியெனில் கவனிக்கப்படாமல் போகும் குற்றங்களின் நிலைமை என்ன ஆகும்…? மனித சமூகம் மீதான நம்பிக்கைகள் தகர்ந்து வருகிறது. அதிகாரம் தவறாக பயன்படுத்தப்படுகிறது.

கொடூர ஆசைகளை நிறைவேற்ற குழந்தைகளை கொல்கின்றனர். மனித தன்மையற்ற இந்த உலகத்துக்கு மீண்டும் ஒரு குழந்தைக்கு உயிர் கொடுக்க தகுதி இல்லை. பிரச்சினைகள் ஹேஷ்டேக்கில் வந்தால் தான் நீதி கிடைக்கும் என்ற நிலைமை இருக்க கூடாது” என்று காட்டமாக கூறியிருக்கிறார். படுகொலை செய்யப்பட்ட சிறுமிக்கு நீதி வேண்டும் என வலியுறுத்தியிருக்கிறார்.

நடிகை வரலட்சுமி சரத்குமார் வெளியிட்டுள்ள பதிவில். “சிறுமியை 3 பேர் பாலியல் வன்கொடுமை செய்து கொன்று உள்ளனர். நமது நீதி துறை அமைப்பு என்ன செய்கிறது. கைது செய்கிறார்கள். ஆனால் எதுவும் நடப்பது கிடையாது. நான் முதல்-அமைச்சருக்கு கோரிக்கை வைப்பது என்ன வென்றால் பாலியல் வன்கொடுமை செய்பவனுக்கு முதல் முறையாக இருந்தாலும் மரண தண்டனை கொடுக்க சட்டம் இயற்றுங்கள். அந்த பயம் இருந்தால் மட்டும் தான் இவர்கள் நிறுத்துவார்கள்” என்று கூறியிருக்கிறார்.

https://twitter.com/varusarath/status/1278930976349908992

நடிகை அதுல்யா ரவி வெளியிட்டுள்ள பதிவில், “தமிழகத்தில் இதயத்தை வலிக்க செய்யும் இன்னொரு சம்பவம் நடந்து இருக்கிறது. குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்பவர்கள் மாற மாட்டார்கள் கடுமையான தண்டனைகள் கொடுக்க வேண்டும்” என்று கூறிஇருக்கிறார்.

நடிகை சாக்‌ஷி அகர்வால் வெளியிட்ட பதிவில், “இதயத்தில் ரத்தம் கசிகிறது. எப்படி சிலர் மனித தன்மையே இல்லாமல் இருக்கிறார்கள். சிறுமி கொலைக்கு நீதி வேண்டும்” எனக் கூறியிருக்கிறார்.