‘தமிழுக்கும் தமிழர்களுக்கும் நன்றிக்கடன் பட்டவளாக இருப்பேன்…’ நடிகை சிம்ரன் நெகிழ்ச்சி

Read Time:2 Minute, 54 Second
Page Visited: 604
‘தமிழுக்கும் தமிழர்களுக்கும் நன்றிக்கடன் பட்டவளாக இருப்பேன்…’  நடிகை சிம்ரன் நெகிழ்ச்சி

நடிகை சிம்ரன் சினிமாவுக்கு வந்து 23 ஆண்டுகள் ஆகிறது.

1997-ல் வி.ஐ.பி, ஒன்ஸ்மோர் ஆகிய 2 படங்களில் அறிமுகமானார். அதன்பிறகு தொடர்ந்து படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். இந்த படங்கள் ஒரே நாளில் திரைக்கு வந்தது. தனது மெல்லிய இடை, சிரிப்பு, அசத்தல் நடனம், சொக்க வைக்கும் அழகு என அன்றையை திரையுலகை ஆக்கிரமித்து இருந்தது சிம்ரன் தான். பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்த சிம்ரன், தமிழக ரசிகர்களின் மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்துக்கொண்டார்.

இன்றும் அவர் வரும் காதல் மற்றும் துள்ளல் நடன பாடல்களுக்கும் வாய் அசைக்காதவர்களோ, நடனம் ஆடாதவர்களே இருக்க முடியாது எனும் அளவிற்கு நேர்த்தியான நடிகையாக இருந்தவர். நேருக்கு நேர், அவள் வருவாளா, நட்புக்காக, துள்ளாத மனமும் துள்ளும், வாலி, பிரியமானவளே, பம்மல் கே.சம்மந்தம், கன்னத்தில் முத்தமிட்டால், நியூ, வாரணம் ஆயிரம் உள்பட பல வெற்றி படங்களில் நடித்து இருக்கிறார். சிம்ரன் 2003-ல் தீபக் பகா என்பவரை திருமணம் செய்து கொண்டு சில காலம் சினிமாவிலிருந்து விலகியிருந்தார்.

பின்னர் இரண்டாம் இன்னிங்சிலும் வெற்றியை குவிக்கிறார். தற்போது குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். திரையுலகில் 23 வருடங்களாக நீடிப்பது குறித்து சமூக வலைத்தளத்தில் நெகிழ்ச்சியை பகிர்ந்து இருக்கிறார்.

அவர் இதுகுறித்து கூறும்போது, “23 ஆண்டுகளுக்கு பிறகும் திரையுலக சகாப்தமான சிவாஜி கணேசனுடன் பணியாற்றிய நாட்களை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன். அந்த நாளில் எனது வாழ்நாள் கனவு நிறைவேறியது. அவரிடம் இருந்து ஆசிர்வாதமும் படிப்பினையும் கிடைத்தது. அதுபோல் நண்பர்கள் விஜய், பிரபுதேவா, ரம்பா, அப்பாஸ் ஆகியோருடன் நடித்ததும் எனது அதிர்ஷ்டம். எனது கடைசி மூச்சு உள்ளவரை தமிழுக்கும் தமிழர்களுக்கும் நன்றிக்கடன் பட்டவளாக இருப்பேன்” என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

0 0
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %