லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கிலிருந்து சீனப்படைகள் வெளியேறியது…

Read Time:2 Minute, 48 Second

லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியிலிருந்து சீன ராணுவம் ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு பின்வாங்கியிருக்கிறது என தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

பிரதமர் மோடி வெள்ளிக்கிழமையன்று எல்லையில் நிலையை கண்டறிந்து ஆய்வு செய்ய சென்றார். இதனைத் தொடர்ந்து எல்லையில் இந்நகர்வு ஏற்பட்டுள்ளது.

லடாக் எல்லையில் கடந்த மாதம் 15-ம் தேதி இந்தியா- சீனா ராணுவம் இடையே கடுமையான மோதல் நடந்தது. இதில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். சீன தரப்பில் 35 வீரர்கள் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து எல்லையில் பதற்றம் அதிகரித்து உள்ளது. எல்லையில் படைகளை வாபஸ் வாங்குவது மற்றும் அமைதியை நிலை நாட்டுவது தொடர்பாக இருநாட்டு ராணுவம் தரப்பில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இந்நிலையில் வெள்ளியன்று பிரதமர் மோடி லடாக் சென்று நிலையை ஆய்வு செய்தார். இந்நிலையில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியிலிருந்து சீனப்படைகள் சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு பின் வாங்கியிருக்கிறது என தகவல் வெளியாகியிருக்கிறது. அப்பகுதியில் இந்திய வீரர்களும் பின்வாங்கியுள்ளனர் மற்றும் இரு தரப்பு படையினருக்கும் இடையே இடைப்பகுதி மண்டலம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது என தகவல்கள் தெரிவித்து உள்ளன என செய்திகள் வெளியாகியிருக்கிறது.

“இந்த படைகள் வாபஸ் சம்பவமானது நிரந்தரமானதா மற்றும் நம்பகத்தன்மையானதா என்பதை காண பொறுமை அவசியமாகும்,” என இவ்விவகாரம் தொடர்பாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன என செய்தி வெளியாகியிருக்கிறது.

புதன்கிழமையன்று இந்தியா மற்றும் சீன ராணுவம் இடையே மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தையானது சுமார் 12 மணி நேரங்கள் நீடித்தது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இருநாட்டு படைகளுமே பின்வாங்கியிருக்கிறது. சீன தரப்பில் அமைக்கப்பட்டிருந்த கட்டுமானங்கள் அகற்றப்பட்டு இருக்கிறது. இருதரப்பு மோதல் ஏற்படுவதற்கு முன்னதாக நிலைக்கொண்ட பகுதிக்கு சீன ராணுவம் பின்வாங்கியிருக்கிறது என செய்திகள் வெளியாகியிருக்கிறது.