சீனாவில் ‘புபோனிக் பிளேக்’ நோய்… நீங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டியவை…

Read Time:4 Minute, 49 Second

சீனாவில் கடந்த ஆண்டு இறுதியில் உருவான கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதையும் தனது கட்டுப்பாட்டில் வைத்து இருக்கிறது.

இந்த நோயில் இருந்து மீள்வதற்குள் மற்றொரு அதிர்ச்சியாக கொடூர புபோனிக் பிளேக் நோயும் சீனாவில் தலைகாட்ட தொடங்கி இருக்கிறது என்ற செய்தி வெளியகியிருக்கிறது.

சீனாவின் மங்கோலியா தன்னாட்சி பிரதேசத்துக்கு உட்பட்ட பயன்னார் நகரில் இந்த நோய்க்கு ஒருவர் பாதிக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவர் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளார். பிளேக் நோய் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதால் பயன்னார் நகரம் முழுவதும் உஷார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது.

மர்மோட் எனப்படும் ஒருவகை அணிலின் இறைச்சியை தின்றதால் இவர்கள் பிளேக் தாக்குதலுக்கு ஆளாகி இருக்கின்றனர் எனவும் கூறப்படுகிறது. சீனாவில் பிளேக் நோய் கண்டறியப்பட்டு இருப்பது அரசையும், மருத்துவ நிபுணர்களையும் அதிர்ச்சியடைய செய்து இருக்கிறது. சீனாவில் சமீபத்தில் பன்றியில் இருந்து பரவக்கூடிய ஜி4 வைரஸ் கண்டறியப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே பிளேக் தொற்று உணரப்பட்டால் அரசுக்கு தகவல் தெரிவிக்குமாறு அங்கு கேட்டுகொள்ளப்பட்டு உள்ளது.

புபோனிக் பிளேக் ஒரு பாக்டீரியா தொற்று காரணமாக ஏற்படுகிறது மற்றும் சிகிச்சையளிக்கப்படாவிட்டால் மிகவும் ஆபத்தானது. நுண்ணுயிர் எதிர்ப்பிகள் மூலம் இதற்கு சிகிச்சைகள் கிடைக்கின்றன. இப்போது அங்கு நோயாளி எவ்வாறு பாதிக்கப்பட்டிருக்கலாம் என்பது தெளிவாக தெரியவில்லை என்றாலும், அங்கு மூன்றாம் நிலை எச்சரிக்கையாக விலங்குகளை வேட்டையாடுவதையும் உட்கொள்வதையும் தடைசெய்கிறது. ஏனெனில், இது அபாயகரமான நோயைப் பரப்பக்கூடும் என அறிவியலாளர்கள் எச்சரித்து உள்ளனர்.

புபோனிக் பிளேக் சிகிச்சை

புபோனிக் பிளேக் முன்னர் இடைக்காலத்தில் “கருப்பு மரணம்” என்று அழைக்கப்பட்டது. இது மிகவும் வீரியம் மற்றும் ஆபத்தை ஏற்படுத்தும் நோயாகும், இது கொறித்துண்ணிகள் மூலம் பரவுகிறது. 2017 ஆம் ஆண்டில் மடகாஸ்கர் உள்ளிட்ட பகுதியில் ஏற்பட்ட பாதிப்பில் 300 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். தொடர்ச்சியாக பிளேக் நோய்கள் வெடித்தன. மே 2019 இல் மங்கோலியாவில் இன்னர் பிளேக் நோயால் இரண்டு பேர் இறந்தனர். இதனையடுத்து கொறித்துண்ணியை வேட்டையாடுவது மங்கோலியாவில் சட்டவிரோதமாக்கப்பட்டது. இது நல்ல ஆரோக்கியத்திற்கான உணவாக விற்கப்பட்டது.

இது நவம்பர் 2019-ல் மங்கோலியா பகுதியில் வசிப்பவர்களிடையே நான்கு வகையான பிளேக் நோய்கள் பரவியுள்ளது. இதில் இரண்டு நிமோனிக் பிளேக் மற்றும் ஒரு கொடிய பிளேக் நோயாகும்.

புபோனிக் பிளேக்கின் அறிகுறிகள் காய்ச்சல், தலைவலி, குளிர் மற்றும் பலவீனம் ஆகியவை அடங்கும். வீக்கம், மென்மையான மற்றும் வலிமிகுந்த நிணநீர் முனையங்கள் குமிழ்கள் போன்றவையும் இதில் அடங்கும். 14 ஆம் நூற்றாண்டில் பெரும் அச்சத்தையும் மரணத்தையும் தூண்டி 50 மில்லியனுக்கும் அதிகமான இறப்புகளுக்கு வழிவகுத்த புபோனிக் பிளேக் இப்போது ஒரு தொற்றுநோயாக மாற வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.

இது பொதுவான நுண்ணுயிர் எதிர்ப்பிகளுடன் சிகிச்சையளிக்கக்கூடியது மற்றும் தொற்று நோய் நிபுணர்களிடையே நோயைப் பற்றி அதிக புரிதல் உள்ளது. 17 ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்திலும் பின்னர் 19 ஆம் நூற்றாண்டில் சீனாவிலும் இந்தியாவிலும் பிளேக் வெடித்தது, இது 12 மில்லியனுக்கும் அதிகமான மக்களை கொன்றது என்பது குறிப்பிடத்தக்கது.