கீழடி அகழாய்வு: கொந்தகையில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு…

Read Time:3 Minute, 6 Second
Page Visited: 304
கீழடி அகழாய்வு: கொந்தகையில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு…

கீழடி அருகே கொந்தகையில் நடைபெற்று வரும் அகழாய்வு பணியில் குழந்தைகளின் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டு உள்ளது.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் யூனியனை சேர்ந்தது கீழடி ஊராட்சி பகுதியில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் மத்திய-மாநில அரசுகள் சார்பில் அகழாய்வு பணிகள் 5 கட்டங்களாக நடைபெற்றது. தற்போது 6-ம் கட்ட அகழாய்வு பணிகள் கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய 4 பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

ஆய்வின் போது சிறிய பானை, பெரிய பானை, செங்கல் கட்டுமான பகுதி, விலங்கின எலும்புக்கூடு ஆகியவை கண்டெடுக்கப்பட்டு உள்ளன. கொந்தகையில் சில குழிகள் தோண்டப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டதில் முதுமக்கள் தாழி மற்றும் சிறிய வகை பானைகள், மனித எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டது. அகரத்தில் மண் பானை ஓடுகள், நத்தைகூடுகளும் மணலூரில் சுடுமண் உலையும் கிடைத்தது. கொந்தகையில் கிடைத்த முதுமக்கள் தாழியில் மனித உடல் எலும்புகள் அதிகமாக கிடைத்தது.

தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்ட நிலையில் கொந்தகையில் நேற்று (ஜூலை 7) நடந்த அகழாய்வு பணியில் குழந்தையின் முழு எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து தொல்லியல் ஆய்வாளர்கள் மற்றும் உதவியாளர்கள் எலும்புக்கூட்டினை சேதாரம் இல்லாமல் முழுமையாக தோண்டி எடுத்து சுத்தம் செய்து உள்ளனர். அதன் அளவை கணக்கிடும்போது 95 செ.மீ. உயர குழந்தையின் எலும்புக்கூடு என்பது தெரியவந்துள்ளது.

இதன் தலை பகுதி மட்டுமே 20 செ.மீ. இருக்கும் என தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இந்த குழந்தையின் எலும்புக்கூடு கிடைத்த இடத்தின் அருகே கடந்த மாதம் 75 செ.மீ. உயரம் உள்ள குழந்தையின் எழும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது. இந்த எலும்புக் கூடுகள் மரபணு சோதனைக்கு அனுப்பப்பட்டு பரிசோதிக்கப்படும் என தொல்லியல் துறையினர் தெரிவித்து உள்ளனர்.

டி.என்.ஏ பரிசோதனையை மேற்கொண்ட பின்னரே குழந்தைகளின் வயது, பாலினம், இறப்புக்கான காரணம் மற்றும் பிற விவரங்கள் தெரியவரும் என தொல்லியல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

0 0
Happy
Happy
100 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %