சீனாவுடனான மோதலில் இந்தியாவின் பக்கம் அமெரிக்க ராணுவம் நிற்கும்… வெள்ளை மாளிகை சொல்வது என்ன…?

Read Time:3 Minute, 39 Second
Page Visited: 147
சீனாவுடனான மோதலில் இந்தியாவின் பக்கம் அமெரிக்க ராணுவம் நிற்கும்… வெள்ளை மாளிகை சொல்வது என்ன…?

லடாக் எல்லையில் இந்திய பகுதிக்குள் சீன ராணுவம் ஊடுருவியதால் கடந்த மாதம் 15-ம் தேதி இருதரப்பு ராணுவத்துக்கு இடையே கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் மோதல் ஏற்பட்டது.

இதில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். சீனா தரப்பில் சுமார் 35 பேரும் உயிரிழந்தனர். இதனால் எல்லையில் இருதரப்பும் படைகளை குவித்து வரிந்து கட்டிக்கொண்டு நின்றன. எனவே, இருநாட்டு எல்லையில் போர் மேகம் சூழ்ந்ததுடன், பதற்றமும் அதிகரித்தது.

இதற்கு மத்தியில் அங்கு பதற்றத்தை தணித்து அமைதியை நிலைநாட்டுவதற்காக இருதரப்பும் பேச்சுவார்த்தைகளையும் தொடர்ந்தன. தொடர் பேச்சுவார்த்தையின் காரணமாக பதற்றம் நிறைந்த பகுதியில் படையை இருநாடுகளும் விலக்கியுள்ளன. சீனா மோதலில் ஈடுபட்ட போது இந்தியாவிற்கு பல்வேறு நாடுகள் ஆதரவை தெரிவித்து இருந்தன.

இந்நிலையில், சீனாவை எங்கும் அதிகாரம் செய்யவிடமாட்டோம். இந்தியாவுக்கு அமெரிக்கா ராணுவம் துணை நிற்கும் என வெள்ளை மாளிகை அதிகாரி சூசகமாக தெரிவித்து உள்ளார்.

அமெரிக்க வெள்ளை மாளிகையின் தலைமை அதிகாரி மார்க் மீடோஸ் செய்தி சேனலுக்கு பேட்டியளித்து பேசுகையில், இந்தியா-சீனா இடையிலான மோதல் பற்றிய கேள்விக்கு பதில் உரைத்து உள்ளார்.

அவர் அளித்த பதிலில், ஒரு விஷயத்தை தெளிவுபடுத்திக் கொள்ள விரும்புகிறேன். உலகத்தில் சீனாவோ, மற்ற நாடுகளோ தாங்கள்தான் சக்திவாய்ந்தவர் என்று சொல்லிக்கொண்டு, பிற நாடுகளின் மீது ஆதிக்கம் செலுத்துவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். எங்கும் இதை அனுமதிக்க மாட்டோம். சீனாவாக இருந்தாலும், அல்லது வேறு எந்த நாடாக இருந்தாலும் அந்த நாட்டை நாங்கள் ஆதரிக்க மாட்டோம்.

இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டாலும் நட்புறவின் (இந்தியா) பக்கமே அமெரிக்க ராணுவம் நிற்கும். இதில் அமெரிக்க ராணுவம் தொடர்ந்து வலுவாக நிற்கும். தெற்கு சீன கடல் பகுதிக்கு 2 விமானம் தாங்கி கப்பல்களை அமெரிக்கா அனுப்பி வைத்து இருக்கிறது. உலகிலேயே அமெரிக்காதான் இன்னும் வலுவான சக்தி என்பதை உலகம் அறிந்து கொள்வதற்காக நாங்கள் இதை செய்கிறோம்.

அமெரிக்க ராணுவத்துக்கு டிரம்ப் நிறைய முதலீடு செய்து உள்ளார். அமெரிக்க ராணுவ வீரர்களும், வீராங்கனைகளும் தினந்தோறும் தியாக உணர்வுடன் பணியாற்றி வருகிறார்கள் என தெரிவித்து இருக்கிறார்.

0 0
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %