இந்தியாவில் 2020-க்குள் கொரோனா மருந்துக்கு வாய்ப்பில்லை… நாடாளுமன்ற குழு தகவல் தெரிவிப்பது என்ன..?

Read Time:6 Minute, 50 Second
Page Visited: 198
இந்தியாவில் 2020-க்குள் கொரோனா மருந்துக்கு வாய்ப்பில்லை… நாடாளுமன்ற குழு தகவல் தெரிவிப்பது என்ன..?

உலகம் முழுவதும் மனித குலத்தின் இன்றைய ஒற்றை நோக்கமானது கொரோனா வைரசுக்கு மருந்து கண்டிபிப்பது என்பதாகும். இந்தியாவில் மின்னல் வேகத்தில் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு நூற்றுக்கணக்கான உயிர்கள் தினமும் மடிகின்றன. புதிய நோயாளிகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து 20 ஆயிரத்தை தாண்டி உச்சம் தொடுகிறது.

இந்தியாவில் மருந்து

இந்தியாவும் கொரோனா வைரசுக்கு எதிரான மருந்து கண்டுபிடிக்கும் பணியில் முன்னிலை வகிக்கிறது.

‘கோவேக்சின்’ என்று அழைக்கப்படுகிற கொரோனா தடுப்பூசி மருந்தை ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனத்துடன், புனேயில் உள்ள இந்திய வைராலஜி நிறுவனமும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் இணைந்து கூட்டாக உருவாக்கி இருக்கிறது. இந்த தடுப்பூசியை விலங்குகளுக்கு செலுத்திய சோதனை வெற்றி பெற்றிருக்கிறது.

இதேபோன்று ஜைடஸ் மருந்து நிறுவனம் மற்றொரு கொரோனா தடுப்பூசி மருந்தான
‘ஜைகோவ்-டி’ யை உருவாக்கி உள்ளது. இந்த தடுப்பூசியை விலங்குகளுக்கு செலுத்தி சோதித்து பார்க்கப்பட்டு உள்ளது. அதில், நல்ல முடிவு கிடைத்துள்ளது. இதையடுத்து இரு மருந்துகளையும் மனிதர்களுக்கு செலுத்தி பார்ப்பதற்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

ஆகஸ்ட் 15

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐசிஎம்ஆர்) இயக்குநர் பல்ராம் பார்கவா சமீபத்தில், பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு எழுதிய கடிதத்தில் கொரோனாவுக்கான தடுப்பு மருந்தான கோவாக்ஸின் மருந்தை மனிதர்கள் மீதான கிளிக்கல் பரிசோதனை விரைவாக முடித்து ஆக்ஸட் 15-ம் தேதி அறிமுகப்படுத்த ஏற்பாடு செய்ய வேண்டும். இதற்காக 12 மருத்துவமனைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதனால் ஆகஸ்ட் 15-ம் தேதிக்குள் கொரோனா மருந்து இந்தியாவில் அறிமுகமாகும் என்று பேச்சு எழுந்தது. ஆனால், மருத்துவ வல்லுநர்கள், ஆய்வாளர்கள் கடும் அதிருப்தி தெரிவித்த நிலையில் இந்த அறிவிப்பிலிருந்து பின்வாங்கப்பட்டது.

ஒரு மருந்தை மனிதர்களிடம் முழுமையாக பயன்படுத்த அதனால் பக்கவிளைவுகள் எதுவுமில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். ஆனால், அதனை உடனடியாக ஆய்வு செய்துவிட முடியாது என்ற கூற்று நிலவுகிறது.

நாடாளுமன்ற குழு

2020-ம் ஆண்டுக்குள் கரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்து மக்கள் பயன்பாட்டுக்கு கிடைக்க வாய்ப்பில்லை 2021-ம் ஆண்டு தொடக்கத்தில்தான் கரோனா தடுப்புமருந்தை எதிர்பார்க்க முடியும் என்று அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துக்கான நாடாளுமன்ற நிலைக்குழு தெரிவித்துள்ளது

இந்திய நாடாளுமன்றத்தில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துக்கான நிலைக்குழு உள்ளது. குழுவின் தலைவராக காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் உள்ளார். இதில் 30 எம்.பி.க்கள் உறுப்பினர்களாக இருக்கின்றனர். இந்த குழுவின் கூட்டம் இணையம் வாயிலாக நேற்று (ஜூலை 10) நடைபெற்றது. அப்போது, மருந்து குறித்து மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை, உயிரிதொழில்நுட்பத்துறை, சிஎஸ்ஐஆர், அரசின் தலைமை அறிவியல் ஆலோசகர் ஆகியோர் பங்கேற்று விளக்கம் அளித்தனர்.

இதனையடுத்து மாநிலங்களவை தலைவர் வெங்கய்ய நாயுடுவுக்கு, நாடாளுமன்ற நிலைக்குழுத் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கடிதம் எழுதி உள்ளார். அதில், “ இந்திய அறிவியளாலர்கள் இந்த ஆண்டுக்குள் கொரோனா வைரசுக்கு இந்தியாவில் தடுப்பு மருந்து கிடைக்காது. 2021-ம் ஆண்டு தொடக்கத்தில்தான் தடுப்பு மருந்துக்கான வாய்ப்பு இருக்கும் என தெரிவிக்கின்றனர். அது உள்நாட்டில் தயாரிக்கப்படுபவையாகவும் அல்லது உற்பத்தி செய்யப்படுபவையாக இருக்கலாம்.

இந்த கூட்டத்தில் குறைந்த விலையில் மருத்துவ உபகரணங்களை கண்டுபிடிக்க அறிவுறுத்தி உள்ளோம். குறிப்பாக வென்டிலேட்டர்களை ரூ.30 ஆயிரத்துக்குள் கண்டுபிடிக்க கோரினோம்” எனக் குறிப்பிட்டு உள்ளார்.

இதற்கு குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யநாயுடு டுவிட்டரில் பதில் அளித்து உள்ளார். அதில், “ மார்ச் 23-ம் தேதிக்கு பின்னர் 3 மாதங்களுக்குப்பிறகு நாடாளுமன்ற நிலைக்குழு கூடியதை நான் வரவேற்கிறேன். அனைத்து உறுப்பினர்களும் தங்களின் கடமையை செய்ய ஆர்வமாக இருக்கிறார்கள், ஆனால், சூழல், தாமதத்தை ஏற்படுத்திவிட்டது. சமூக விலகலுடன் அடுத்தடுத்த கூட்டங்கள் நடத்த சாதகமான நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்து உள்ளார். வரும் 15-ம் தேதி உள்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு கூடுகிறது.

0 0
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %