இந்தியாவில் ஆசியாவின் மிகப்பெரிய சூரிய மின்சக்தி திட்டம்… நாம் தெரிந்துக்கொள்ள வேண்டியவை…

Read Time:4 Minute, 41 Second
Page Visited: 206
இந்தியாவில் ஆசியாவின் மிகப்பெரிய சூரிய மின்சக்தி திட்டம்… நாம் தெரிந்துக்கொள்ள வேண்டியவை…
  • மத்தியபிரதேச மாநிலம் ரேவா நகரில் 1,500 ஹெக்டேர் நிலப்பரப்பில் சூரியஒளி மின்சக்தி பூங்கா அமைக்கப்பட்டு இருக்கிறது.
  • மத்தியப் பிரதேச அரசின் ரேவா அல்ட்ரா மெகா சோலார் லிமிட், சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆப் இந்தியா ஆகியவை இணைந்து இந்த திட்டத்தை செயல்படுத்தி உள்ளன.
  • இங்கு தலா 500 ஹெக்டேர் பரப்பளவில் தலா 250 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட 3 சூரியஒளி மின்உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
  • இந்த 750 மெகா வாட் சூரிய மின் திட்டத்தால், 15 லட்சம் டன் கார்பன் எரிவாயு வெளியேறுவது தடுக்கப்படும்.
  • இது ஆசியாவிலேயே மிகப்பெரிய சூரியஒளி மின்சக்தி திட்டம் ஆகும்.
  • இந்த ரூ .4,500 கோடி மதிப்பிலான சூரியஒளி மின்சக்தி திட்டம் உலக வங்கி மற்றும் தூய்மையான தொழில்நுட்ப நிதியிலிருந்து (Clean Technology Fund) இந்தியா நிதிப்பெற்று செயல்படுத்தும் திட்டமாகும்.
  • இந்த சூரிய மின்திட்டத்திலிருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் 24 சதவீதம் டெல்லி மெட்ரோ ரெயில் நிர்வாகத்திற்கும், மீதமுள்ள 76 சதவீதம் மத்தியப்பிரதேச அரசு மின்பகிர்பான நிலையங்களுக்கு வழங்கப்பட உள்ளது. பிரதமர் மோடி நேற்று (ஜூலை 10) டெல்லியில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் இந்த மின்உற்பத்தி திட்டத்தை தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார்.

அப்போது பிரதமர் மோடி பேசுகையில், அன்னை நர்மதா மற்றும் வெள்ளைப்புலியின் அடையாளத்தை கொண்டு வரலாற்றில் அறியப்படும் ரேவா நகரம், இப்போது ஆசியாவின் மிகப்பெரிய சூரியஒளி மின்உற்பத்தி திட்டத்தின் மூலமும் முக்கியத்துவம் பெற்று உள்ளது.

இதேபோல் ஷாஜாபூர், நீமுச், சட்டார்பூர் ஆகிய நகரங்களிலும் சூரியஒளி மின்உற்பத்தி திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த திட்டங்களெல்லாம் நிறைவடையும் போது மாசற்ற, மலிவான மின் உற்பத்தியின் மையமாக மத்தியபிரதேச மாநிலமாகும். சூரியஒளி மின்உற்பத்தி மாசற்றது மற்றும் பாதுகாப்பானது. இந்தியாவில் மத்தியபிரதேச மாநிலம் மாசற்ற அதேசமயம் குறைந்த செலவில் மின்சாரம் உற்பத்தி செய்யும் முக்கிய மையமாக மாற உள்ளது.

இங்கு உற்பத்தியாகும் மின்சாரம் மத்தியபிரதேச மாநிலத்துக்கு மட்டுமின்றி டெல்லி மெட்ரோ ரெயில் சேவைக்கும் பயன்படுத்தப்பட இருக்கிறது. நாட்டில் வளர்ச்சி அதிகரித்து வருவதால், மின்சார தேவையும் அதிகரித்து இருக்கிறது. தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் மின்சார உற்பத்தியிலும் தன்னிறைவு பெறுவதும் ஒரு அம்சம் ஆகும்.

மின்சார உற்பத்தி துறையில் இறக்குமதியை சார்ந்து இருப்பதை தவிர்க்கும் வகையில் சூரியஒளி மின்தகடு, பேட்டரிகள் மற்றும் அது தொடர்பான உபகரணங்களை நாமே உள்நாட்டில் தயாரிக்க வேண்டும். 21-ம் நூற்றாண்டில் மின்சார உற்பத்தியில் சூரிய ஒளி மின்சக்தி என்பது மிகவும் முக்கிய பங்கு வகிக்கும். உலகம் முழுவதுமே சூரியஒளி உறுதியாக இருக்கிறதுது. சூரியஒளி மின் உற்பத்தியால் சுற்றுச்சூழலும் மாசுபடுவது கிடையாது.

எனவே மின்சார தேவையை பூர்த்தி செய்ய தற்சார்புடன் செயல்பட முடியும் எனக் கூறினார்.

0 0
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %