இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களில் ஏராளமானவர்களுக்கு எந்தஒரு அறிகுறியும் காணப்படவில்லை என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது. இதனையடுத்து கொரோனா தொற்று தொடர்பாக லேசான அறிகுறிகளை கொண்டவர்கள் மற்றும் அறிகுறியற்ற நோயாளிகள் வீட்டிலேயே எவ்வாறு தனிமையாகிக்கொள்ளலாம் என்பது தொடர்பான வழிகாட்டுதல்களை திருத்தி வழங்கியிருக்கிறது.
திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களில் கொரோனா வைரஸ் நோயாளிகள் தங்கள் வீட்டு தனிமைப்படுத்தலை முடிவுக்கு கொண்டுவரும் நாட்களின் எண்ணிக்கையையும் குறைத்துள்ளன. ஜூலை 2 அன்று வெளியிடப்பட்ட திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை:-
வீட்டு தனிமைப்படுத்தலுக்கு யார் தகுதியானவர்…?
- மருத்துவ ரீதியாக லேசான அல்லது முன் அறிகுறியை கொண்டவர்கள் மட்டுமே வீட்டு தனிமைக்கு தகுதியுடையவர்கள்.
- 60 வயதிற்கு மேற்பட்ட வயதான நோயாளிகள் மற்றும் உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், இதய நோய், நாள்பட்ட நுரையீரல் / கல்லீரல் / சிறுநீரக நோய், பெருமூளை நோய் போன்ற நோயுற்ற நிலைமைகளை கொண்டவர்கள் ஒரு மருத்துவரால் முறையான மதிப்பீட்டிற்குப் பிறகு மட்டுமே வீட்டை தனிமைப்படுத்த அனுமதிக்கப்படுவார்கள்.
- நோயெதிர்ப்பு சக்தி குறைவான நோயாளிகள் வீட்டு தனிமைப்படுத்த தகுதியற்றவர்கள். எச்.ஐ.வி.க்கு உட்பட்டவர்கள், மாற்று சிகிச்சை பெறுபவர்கள், புற்றுநோய் சிகிச்சை பெறுபவர்களும் இதில் அடங்குவர்.
அறிகுறியற்ற நோயாளிகள் குறித்த தகவல் என்ன? அவர்களை வீட்டு தனிமைப்படுத்த முடியுமா?
ஆமாம், அறிகுறியற்ற நபர்கள் லேசான மற்றும் முன் அறிகுறிகளுடன் இருப்பவர்கள் வீட்டை தனிமைப்படுத்தலாம்.
நான் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறேன். எந்த சூழ்நிலையில் நான் மருத்துவ உதவியை நாட வேண்டும்?
வீட்டு தனிமைப்படுத்தப்பட்டவர்கள் பின்வரும் இன்னல்களை அனுபவித்தால் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும் என்று மத்திய அரசு கூறியுள்ளது:-
- ஆக்ஸிஜன் அளவில் ஏற்ற இறக்கம்
- மந்தமான பேச்சு ஆற்றல்
- மூட்டு அல்லது முகத்தில் பலவீனமான நிலை
- சுவாசிப்பதில் சிரமம்
- மார்பில் வலி / அழுத்தம்
- உதடுகள் / முகத்தில் நீல நிறமாற்றம்
கொரோனா வைரஸ் நோயாளிகள் எப்போது வீட்டு தனிமைப்படுத்தலை முடிக்கலாம்…?
அறிகுறிகள் தோன்றிய 10 நாட்களுக்குப் பிறகு நோயாளிகள் தங்கள் வீட்டு தனிமைப்படுத்தலில் இருந்து வெளியேற்ற முடியும் மற்றும் மூன்று நாட்களுக்கு காய்ச்சல் இல்லாமல் இருக்க வேண்டும். முந்தைய வழிகாட்டுதல்களில் அறிகுறிகள் தோன்றிய 17 நாட்களுக்கு தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும். அப்போது 10 நாட்களுக்கு காய்ச்சல் இல்லாமலும் இருத்தல் வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. குறுகிய காலத்தில் அதிகமாக பாதிப்பில் இருந்து மீள்கிறார்கள் என்பதும் இதன் பொருள்.
அறிகுறிகள் நீங்கியபின் அந்த நபர் கொரோனா வைரசு தொற்று சோதனையை மேற்கொள்ள வேண்டும் என்று அர்த்தமா?
இல்லை, திருத்தப்பட்ட வழிகாட்டுதலின் கீழ், வீட்டு தனிமை காலம் முடிந்ததும் ஒரு நபர் சோதனைக்கு உட்படுத்த தேவையில்லை.
வீட்டு தனிமைப்படுத்தலைத் தேர்வுசெய்தால் நான் என்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்….?
மருத்துவரின் அறிவுறுத்தல்களை தவிர, கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வீட்டு தனிமைப்படுத்தலை தேர்வுசெய்தவர்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள்:-
- நோயாளிகள் ஒரு தனி அறையில் இருக்க வேண்டும், மற்றவர்களிடமிருந்து விலகி இருக்க வேண்டும் – குறிப்பாக வயதானவர்களிடம் இருந்து.
- அவர்கள் எல்லா நேரங்களிலும் மூன்று அடுக்கு முகக்கவசம் அணிய வேண்டும். மருத்துவ அதிகாரி அளித்த அறிவுறுத்தலின் படி ஒவ்வொரு எட்டு மணி நேரத்திற்கும் பிறகு முகக்கவசத்தை அப்புறப்படுத்த வேண்டும்.
- அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும்.
- நோயாளி குறைந்தது 40 விநாடிகளுக்கு சோப்பு மற்றும் தண்ணீரில் அடிக்கடி கைகளைக் கழுவ வேண்டும்
- தட்டுகள், துணிகள் போன்ற பொருட்களை வேறு யாருடனும் பகிர வேண்டாம்.
கொரோனா வைரஸ் நோயாளிகளை பராமரிப்பவர் என்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்…?
- பராமரிப்பாளர் ஒரு நோயாளியுடன் அறையில் இருக்கும்போதெல்லாம் மூன்று அடுக்கு முகக்கவசத்தை அணிய வேண்டும். பயன்பாட்டிற்கு பிறகு முகக்கவசத்தை அப்புறம் செய்து, முகம், மூக்கு அல்லது வாயை தொடுவதை தவிர்க்கவும்
- நோயாளியை கையாளும் போது கையுறைகளை பயன்படுத்துங்கள். கையுறைகளை அகற்றுவதற்கு முன்னும் பின்னும் கை சுகாதார வழக்கத்தை பின்பற்றுங்கள்.
- நோயாளியின் உடல் திரவங்கள், வாய்வழி அல்லது சுவாச சுரப்புகளுடன் நேரடி தொடர்பை தவிர்க்கவும்.
- நோயாளி பயன்படுத்தும் பாத்திரங்கள் மற்றும் உணவுகளை கையுறைகளை பயன்படுத்தி கழுவ வேண்டும்
- நோயாளி இருக்கும் அறையில் இருக்கும் பொருட்களின் மேற்பகுதியில் 1 சதவீத ஹைபோகுளோரைட் கரைசலைக் கொண்ட கிருமி நாசினியால் சுத்தம் செய்ய வேண்டும்
- கையை சுத்தமாக வைத்திருப்பதை எல்லா நேரங்களிலும் உன்னிப்பாக கவனத்துடன் பின்பற்றப்பட வேண்டும். கழுவிய பின் கைகளை உலர காகித துண்டுகளை பயன்படுத்துங்கள்
- பராமரிப்பாளர் அவர்களின் உடல்நலம் மற்றும் வெப்பநிலையையும் கண்காணித்து, COVID-19 இன் அறிகுறிகளை காட்ட தொடங்கினால் உடனடியாக பரிசோதனை செய்ய வேண்டும்
- நோயாளிக்கு அவர்களின் அறையில் வைத்து உணவு வழங்கப்பட வேண்டும்.