கொரோனா வைரஸ்: பொதுவாக தடுப்பூசிகள் எவ்வாறு உருவாக்கப்படுகிறது…? இதோ விபரம்:-

Read Time:2 Minute, 32 Second

உலகில் பலவிதமான தடுப்பூசிகள் உள்ளன, அவை எவ்வாறு தயாரிக்கப்படுகின்றன என்பதன் அடிப்படையில் அவை வகைப்படுத்தப்படுகின்றன. கொரோனா வைரசுக்கு எதிராக மருந்து கண்டுபிடிக்கும் பணியில் உலக நாடுகள் மிகத்தீவிரமாக பணியாற்றி வருகின்றன. ஒவ்வொரு நாடுகளிலும் மருந்து தயாரிக்கும் மற்றும் பரிசோதிக்கும் முறையானது மாற்றங்களை எதிர்க்கொள்கிறது. தடுப்பூசி தயாரிப்பில் மிகவும் பொதுவானது முறையாக செயலற்ற, இனப்பெருக்கம் செய்ய முடியாத வைரஸ்கள் பயன்படுத்துகிறது.

இது எவ்வாறு உருவாக்கப்படுகிறது என்பதை எளிதாக தெரிந்துக்கொள்வோம்…

1) முதலில் கோழியின் முட்டையில் உள்ள செல்கருவில் ஒரு வைரஸ் செலுத்தப்படுகிறது. இது, வைரசை இனப்பெருக்கம் செய்ய அனுமதிக்கிறது.

2) கோழியின் முட்டை செல்களில் வைரஸ் இனப்பெருக்கம் செய்யும் போது, அதற்கு ஏற்ற வகையில் அது தன்னுடைய மரபணுக்களை மாற்றியமைகிறது. அதாவது மனித உடலில் இருப்பதைவிட, கோழியின் செல்லில் மரபணு முற்றிலும் மாறுபட்டவையாகிறது. கோழியின் செல்கள் மனிதனின் செல்களில் இருந்து வேறுப்பட்டவையாகும். எனவே, இந்த மரபணு மாறிய இந்த வைரஸ்களால் மனிதர்களின் செல்களில் இனப்பெருக்கம் செய்ய முடியாது.

3) பின்னர் வைரசிலிருக்கும் புரதங்கள் மற்றும் பிறப்பொருட்கள் நீக்கப்படுகிறது (வைரஸ் இனப்பெருக்கம் கட்டுப்படுத்தப்படுகிறது). பின்னர் நோயெதிர்ப்பு வேதிப்பொருட்களுடன் சேர்க்கப்படுகிறது.

4) பின்னர் வைரஸ் வெப்பம் அல்லது பார்மால்டிஹைடு மூலம் கொல்லப்படுகிறது.

5) ஊசி போடுவதற்கு ஏற்ற திரவத்தில் அது சேர்க்கப்படுகிறது.

இந்த இனப்பெருக்கம் செய்ய முடியாத செத்த வைரஸ்கள் வைரசினால் பாதிக்கப்பட்டவர்கள் உடலில் மருந்து வழியாக செலுத்தப்படும் போது அவைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். அப்போது, மனித உடலில் இருக்கும் வைரஸ்கள் மேலும் பரவாமல் கொல்லப்படும்.