கொரோனா வைரஸ்: தடுப்பூசிகள் எவ்வாறு உங்கள் உடலில் நோயெதிர்ப்பு சக்திக்கு உதவுகிறது…? தெரிந்துக்கொள்வோம்…

Read Time:8 Minute, 30 Second

கொரோனா வைரஸ் வேகமாக பரவுகையில் உயிரிழப்புக்களும் அதிகரித்து மக்கள் மத்தியில் பெரும் அச்சம் சூழ்ந்துள்ளது. இந்த கொடூர வைரசை தடுக்கும் வகையில் ஒரு தடுப்பூசியை கொண்டுவருவதற்காக பயோடெக் நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் அரசு நிறுவனங்கள் தனியாகவோ, கூட்டாகவோ போராடிவருகின்றன.

சிலர் தங்களுடைய முயற்சியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கின்றனர். இதற்கிடையே மரபியல் அடிப்படையிலான தடுப்பூசிகளை பயன்படுத்தலாம் எனவும் சுகாதார நிறுவனங்களுக்கு அறிவுரையை வழங்குகின்றனர்.

தற்போது கொரோனா வைரசுக்கு மருந்து கிடைக்க வேண்டும் என்பது அனைவருடைய விருப்பமாக இருக்கிறது. ஆனால், தடுப்பூசிக்கான அதிகமான மருந்துகளை கண்டுபிடிப்பதைவிடவும் அதற்கான ஒப்புதல் செயல்முறையென்பது மிகவும் முக்கியமான இருக்கிறது. மருந்து மாதிரிகள் எந்தவித இடையூறும் இல்லாமல் மருத்துவ பரிசோதனைகளில் தேர்ச்சியை பெற்றாலும், பயன்படுத்தக்கூடிய கொரோனா வைரஸ் தடுப்பூசி உற்பத்தி செய்ய சுமார் 12 முதல் 18 மாதங்கள் ஆகும் என விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

அடுத்த ஆண்டு மத்தியில் மருந்து பயன்பாட்டிற்கு வரும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கும் நிலையில் மருந்து தயாரிப்பின் பல்வேறு கட்டங்களை தெரிந்துக்கொள்வோம்.

வைரஸ் எதிர்ப்பு மருந்து பயன்பாடு தொடர்பாக அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக நுண்ணுயிரியல் மற்றும் நோயெதிர்ப்புத் துறை பேராசிரியர் டாக்டர் டேவிட் ரெல்மேன் பேசுகையில், “தடுப்பூசிகள் ஆரோக்கியமானவர்களுக்கு தடுப்பாக வழங்கப்படுகின்றன. ஆனால், ஆரோக்கியமான மக்களை யாரும் நோய்வாய்ப்படுத்த விரும்பவில்லை.” என்கிறார்.

நோய்தடுப்பு தடுப்பூசிகள் (நோய் வருவதற்கு முன்னதாக தடுப்பு நடவடிக்கையாக மருந்தை செலுத்துதல் முறையாகும்.) நோய்க்கு சிகிச்சையளிக்கவோ, குணப்படுத்தவோ இல்லை. அவை, உடலில் சாத்தியமான நோயை எதிர்த்துப் போராட உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த முதன்மையாக செயல்படுகிறது.

சிகிச்சை தடுப்பூசிகள் (நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருந்து செலுத்தும் முறையாகும்) உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தின் செயல்திறனை அதிகரிக்கும். உடலில் ஒரு வைரஸ் படையெடுப்பு மற்றும் பாதுகாக்கும் போர் அனைத்தும் ஒரு செல்லுலார் மட்டத்தில் நிகழ்கிறது. உங்கள் உடலுக்குள் நடக்கும் இந்த சண்டையில் நோயை உருவாக்கும் கிருமிகள் வைரஸ்கள், பாக்டீரியாக்கள்தான் கெட்டவர்கள். அவற்றுடன் சண்டையிடும் உங்களுடைய ரத்த வெள்ளை அணுக்கள், குறிப்பாக எதிர்ப்பு சக்திகளை உருவாக்கும் லிம்போசைட்டுகள் ஹீரோக்கள் ஆவர்.

தடுப்பூசிகள் எவ்வாறு உங்கள் உடலில் நோயெதிர்ப்பு சக்திக்கு உதவுகிறது…?

மனித உடலில் ஆரோக்கியமான செல்கள் மற்றும் தீங்கு விளைவிக்கும் வைரஸ் இடையிலான வித்தியாசத்தை அங்கீகரிப்பதன் மூலம் உங்கள் உடலில் நோயெதிர்ப்பு அமைப்பு உங்களை நன்றாக வைத்திருக்கிறது.

உடலுக்குள் வைரசால் சொந்தமாக இனப்பெருக்கம் செய்து, பரவ முடியாது. எனவே, வைரஸ் மனித செல்லுக்குள் நுழைந்து அங்குதான் இனப்பெருக்கம் செய்ய முடியும். கொரோனா வைரசை பொறுத்தவரையில் மேலிருக்கும் ஸ்பைக் புரதம் மூலமாக மனித செல்லுக்குள் நுழைகிறது. மனித செல்லுடன் ஒட்டும்போது செல்லுக்குள் இரைபோ கருவமிலம் எனும் ஆர்.என்.ஏ.வை அனுப்புகிறது. அங்கு தன்னுடைய இனப்பெருக்கத்தை மேற்கொண்டு செல்லின் கருவை தன்னுடைய கட்டுப்பாட்டுக்கள் கொண்டுவருகிறது.

பொதுவாக உடலில் இருக்கும் நோயெதிர்ப்பு கட்டமைப்பு வைரசின் அமைப்பை வடிவங்களால் அங்கீகரிக்கிறபோது நம் உடலில் இருக்கும் புதரம் என்று தீங்கு விளைவிக்கும் வைரஸ்களையும் அனுமதிக்கிறது. இதனையடுத்து வைரஸ்கள் இனப்பெருக்கத்தை தொடங்குகிறது.

இவ்வாறு இனப்பெருக்கம் செய்யும் வைரஸ்கள் ஆன்டிஜென்களை கொண்டு உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தில் தாக்குதலை நடத்தும். நம்முடைய நோயெதிர்ப்பு மண்டலம் சரியாக எதிர்வினையாற்ற முடியாத நிலையில் உடல்நலம் பாதிக்கப்பட்டு நுரையீரலில் தொற்று ஏற்படும். உலகை மிரட்டும் கொரோனா வைரஸ் விவகாரத்திலும் இதுதான் நிலவுகிறது.

வைரசை அழிக்கும் வகையில் உங்களுடைய உடலில் தடுப்பூசி மூலம் மருந்து செலுத்தப்படும். அப்போது, பெறுபவர்களுக்கு லேசான காய்ச்சல் போன்ற சிறிய அறிகுறிகள் தோன்றினாலும், நோய்வாய்ப்படுவது கிடையாது. உங்கள் வெள்ளை ரத்த அணுக்களை வைரசை எதிர்த்துப் போராட செய்யும் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க மருந்து துணைபுரிகிறது. அதாவது வைரசை மற்ற செல்களுக்கு பரவவிடாமல் தடுக்கிறது மற்றும் கொல்கிறது.

இப்போது பிரச்சினை என்னவென்றால், வைரசுடன் போராடி அதனை அழிக்கும் நோயெதிர்ப்பு சக்திக்கு ஒரு குறிப்பிட்ட வடிவம் அவசியமாகும். மனித உடலில் பில்லியன் கணக்கான ரத்த வெள்ளை அணுக்கள் உள்ளன. ஒவ்வொன்றும் தனித்துவமாக சிறப்பு வடிவத்தில் நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்குகின்றன. இதில், ஒரு சில எதிர்ப்புசக்தியின் வடிவங்கள் மட்டுமே வைரசுக்கு எதிராக பயனுள்ளதாக செயல்படும்.

உடலுக்குள் படையெடுக்கும் வைரஸ்களை கொல்ல போதுமான அளவு தேவைப்படும் வடிவிலான அந்த நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்க பல நாட்கள் ஆகலாம். அந்த நேரத்தில், வேகமாக செயல்படும் வைரஸ்கள் பில்லியன் கணக்கில் இனப்பெருக்கம் செய்து பரவுவது மிகவும் முக்கியமான அச்சுறுத்தல் ஆகும். இதனை தடுக்கும் வகையில் தடுப்பூசி மருந்து, ரத்த வெள்ளை அணுக்களில் உள்ள மெமரி செல்கள் எதிர்ப்பு சக்தியை உருவாக்க தூண்டுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %