கொரோனா வைரசுக்கு எதிராக ஆர்.என்.ஏ. அடிப்படையிலான தடுப்பூசி…? விரைந்து உருவாக்கலாம்….

Read Time:5 Minute, 10 Second

ஆர்.என்.ஏ. அடிப்படையிலான தடுப்பூசிகளில் டி.என்.ஏ. மற்றும் ஆர்.என்.ஏ.வின் நியூக்ளிக் அமிலங்கள் பயன்படுத்துகின்றன. இதுவரையில் மருத்துவ பரிசோதனைகளில் மட்டுமே இம்முறை உள்ளது. இம்முறை மருந்துகள் பயன்பாட்டுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இந்த தடுப்பூசிகள் நோய்க்கிருமி, வைரஸ்களின் மரபணு குறியீட்டின் ஒரு பகுதியை அடிப்படையாக கொண்டவையாகும். ஆர்.என்.ஏ. அடிப்படையிலான தடுப்பூசிகளை மிக விரைவாக உருவாக்கலாம், அதிகமான நோய்களுக்கு சிகிச்சையளிக்கலாம் மற்றும் வழக்கமான தடுப்பூசிகளை விட உற்பத்தி செய்வது மிகவும் எளிதாக இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

அமெரிக்காவின் மேற்கு வர்ஜீனியா பல்கலைக்கழகத்தின் நுண்ணுயிரியல், நோயெதிர்ப்பு மற்றும் செல் உயிரியல் துறை பேராசிரியர் டாக்டர் இவான் மார்டினெஸ் இதுதொடர்பாக பேசுகையில், “ஒரு தடுப்பூசி முடிந்தவரை விரைவாக உருவாக்கப்பட வேண்டுமானால் ஆர்.என்.ஏ தடுப்பூசிகள் மிகச் சிறந்தவையாகும். இம்முறையால், ஒரு வருடத்திற்குள் ஒரு தடுப்பூசியை வழங்கலாம்.” எனக் கூறுகிறார்.

ஆர்.என்.ஏ. என்பது ரிபோநியூக்ளிக் அமிலம் ஆகும். இது செல்களின் செயல்பாட்டை கட்டுப்படுத்தும் ஒரு மூலக்கூறு. இது வெவ்வேறு வகைகள் உள்ளன. ஆனால் எம்.ஆர்.என்.ஏ. ( தகவலை கடத்தும் கட்டுப்பாட்டு அமைப்பு) செல்கள் புரதங்களை எப்படி உருவாக்குவது என்பதை சொல்கிறது. இந்த புரதங்கள்தான் மனித செல்களில் நெருக்கமாக செயல்படுகிறது. இப்போது பரவும் கொரோனா வைரசின் மரபணு குறிமுறையை சீனா ஜனவரி 10-ம் தேதி வெளிப்படுத்தியது.
இதனையடுத்து வைரசின் ஸ்பைக் புரதக் கூர்முனையை பற்றி மரபணு ஆராய்ச்சி உலகம் முழுவதும் தொடங்கியது.

அமெரிக்காவின் டியூக் மனித தடுப்பூசி நிறுவனத்தின் இயக்குநரும், நோயெதிர்ப்புத் துறை பேராசிரியரும் டாக்டர் பார்ட் ஹேன்ஸ் இதுபற்றி பேசுகையில், “வைரஸின் குறிமுறையுடன் ஒரு சோதனைக் குழாயில் ஒரு ஸ்பைக் புரதத்தை செயற்கையாக உருவாக்க முடியும். டி.என்.ஏ. அல்லது மெசஞ்சர் ஆர்.என்.ஏ. (எம்.ஆர்.என்.ஏ.) மூலம் ஒரு மரபணுவையும் உருவாக்கலாம்.” எனக் கூறுகிறார்.

எம்.ஆர்.என்.ஏ. தடுப்பூசியில் ஒரு வைரசின் ஆன்டிஜெனின் மரபணு குறியீடு நகலெடுக்கப்படுகிறது. அதனுடைய ஆர்.என்.ஏ. உடலில் செலுத்தப்படுகிறது. உடலில் சென்றதும் தேர்ந்தெடுக்கப்பட்ட செல்களை ஆன்டிஜெனை உருவாக்குமாறு ஆர்.என்.ஏ. அறிவுறுத்துகிறது. நோயெதிர்ப்பு மண்டலத்தை எச்சரித்து, புதிய நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க தூண்டுகிறது. இது மனித உடலில் உள்ளிருக்கும் வைரசை அழிக்க உதவும்.

ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக நுண்ணுயிரியல் மற்றும் நோயெதிர்ப்புத்துறை பேராசிரியர் டாக்டர் டேவிட் ரெல்மேன் பேசுகையில், டி.என்.ஏ. அல்லது ஆர்.என்.ஏ. அடிப்படையிலான தடுப்பூசி உற்பத்தியில் “நீங்கள் முழு ஆய்வக உற்பத்தி முறையும் தவிர்க்கலாம். “உங்களுக்கு மருந்து உட்செலுத்தப்படுகிறது என்றால், உங்கள் செல்கள் ஆர்.என்.ஏவை எடுத்து என்ன செய்வது என்று தெரியும். அவை, ஆன்டிஜெனை (நோய் எதிர்ப்பு சக்தியை ) நேரடியாக உருவாக்குகின்றன. மேலும் ஆர்.என்.ஏவை பெரிய அளவில் ஒருங்கிணைக்க முடியும்.” எனக் கூறுகிறார்.

இந்த வகையான தடுப்பூசிகள் நோயெதிர்ப்பு சக்தியை தூண்டுவதற்கு கொரோனா வைரஸின் சொந்த மரபணுக்களில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவையே எடுக்கப்படும்.

இந்த வகையான தடுப்பூசி தொடர்பான ஆய்வுகளும் உலக நாடுகளில் நடந்து வருகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %