சென்னை உள்ளிட்ட 63 விமான நிலையங்களில் 198 அதிநவீன ‘பாடி ஸ்கேனர்‘ பொருத்த முடிவு..!

Read Time:2 Minute, 5 Second
Page Visited: 254
சென்னை உள்ளிட்ட 63 விமான நிலையங்களில் 198 அதிநவீன ‘பாடி ஸ்கேனர்‘ பொருத்த முடிவு..!

இந்தியாவில் உள்ள விமான நிலையங்களில் பயணிகளை சோதனையிடுவதற்கு தற்போது “மெட்டல் டிடக்டர்‘ எனப்படும் உலோக உணர்வுக் கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன. அந்தக் கருவிகளால் உலோகத்தைப் பயன்படுத்தி செய்யப்பட்ட ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டுகளை மட்டுமே கண்டறிய முடியும். உலோகம் பயன்படுத்தப்படாத ஆயுதங்களை கண்டறிய முடியாது.

ஆனால் ‘பாடி ஸ்கேனர்‘ எனப்படும் அதிநவீனக் கருவிகளைக் கொண்டு உலோகம் பயன்படுத்தப்படாத ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டுகளையும் கண்டறியலாம்.

எனவே 2020ம் ஆண்டுக்குள் இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் அதிநவீன பாடி ஸ்கேனர் சோதனைக் கருவிகளைப் பொருத்த வேண்டும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் மத்திய அரசு உத்தரவிட்டது.

இதில் முதல் கட்டமாக முக்கியமான 63 விமான நிலையங்களுக்கு 198 அதிநவீன ‘பாடி ஸ்கேனர்‘ கருவிகளை வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக இந்திய விமான நிலைய ஆணையம் (ஏ.ஏ.ஐ) தெரிவித்துள்ளது. இதற்காக டெண்டர் வழங்கப்பட்டுள்ளதாகவும் அதில் 3 நிறுவனங்கள் ஏலம் எடுத்து உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

198 அதிநவீன கருவிகளில் அதிகபட்சமாக சென்னை விமான நிலையத்தில் 19 கருவிகள் பொருத்தப்பட உள்ளதாக ஏ.ஏ.ஐ. தெரிவித்துள்ளது. அதேபோல் திருச்சி மற்றும் கோவை விமான நிலையங்களில் தலா 4 அதிநவீன கருவிகள் பொருத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 0
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %