வால்வ் பொருத்தப்பட்ட என்-95 முகக்கவசம் பயன்படுத்த வேண்டாம் மத்திய அரசு எச்சரிக்கை ஏன்…?

Read Time:4 Minute, 40 Second
Page Visited: 301
வால்வ் பொருத்தப்பட்ட என்-95 முகக்கவசம் பயன்படுத்த வேண்டாம் மத்திய அரசு எச்சரிக்கை ஏன்…?

வால்வு பொருத்தப்பட்ட என்.95 முகக்கவசம் பயன்படுத்துவது கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்காது என மத்திய சுகாதாரத்துறை எச்சரிக்கையை விடுத்து உள்ளது.

வால்வு பொருத்தப்பட்ட என்.95 முகக்கவசம் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளுக்கு தீங்கு விளைவிக்கும் எனவும் மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய சுகாதாரத் துறை எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டு இருக்கிறது.

கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவ தொடங்கியதும் முகக்கவசங்கள் பயன்பாடுகள் அதிகரிக்க தொடங்கியது. எந்த விதமான முகக்கவசங்களை அணியலாம் என்பது தொடர்பாக பல்வேறு ஆய்வு முடிவுகள் வெளியாகியது. பெரும்பாலும் பருந்தியால் நெய்யப்பட்ட துணியால் தயாரிக்கப்படும் முகக்கவசம் மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே என்.95 மட்டுமே வைரஸ் பரவலை தடுக்கும் என்று கூறப்பட்டது. இதனையடுத்து வால்வு பொருத்தப்பட்ட முகக்கவசம் மக்கள் பயன்பாட்டுக்கு அதிகமாக வரத்தொடங்கியது.

இந்த நிலையில் வால்வு பொருத்தப்பட்ட என்.95 முகக்கவசம் அணிவது தொடர்பான எச்சரிக்கை கடிதம் ஒன்றை, மத்திய சுகாதாரத்துறையின் சேவைகளின் பொது இயக்குனர், மாநில சுகாதார மற்றும் மருத்துவ கல்வி முதன்மை செயலர்களுக்கு அனுப்பியிருக்கிறார்.

அதில், என்-95 முகக்கவசங்களை மக்கள் பொருத்தமில்லாத வகையில் பயன்படுத்துவதை காண முடிகிறது. குறிப்பாக வால்வுடன் கூட முகக்கவசங்களை நியமிக்கப்பட்ட சுகாதார ஊழியர்கள் தவிர பொதுமக்களும் பயன்படுத்தி வருகின்றனர். இவ்வகையான முகக்கவசம் ஒருவரிடமிருந்து கொரோனா வைரஸ் கிருமி வெளியேறுவதை தடுக்காது.

இதனால், தொற்று நோய் பரவுவதை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு தீங்காக அமையும். எனவே, அனைவரையும் மூக்கு மற்றும் வாயை முழுவதுமாக மூடும் முகக்கவசத்தை பயன்படுத்த வலியுறுத்துங்கள். பொருத்தமற்ற முறையில் என்-95 முகக்கவச பயன்படுத்தப்படுவதை தடுக்கவும் என எச்சரிக்கை விடுத்து இருக்கிறது.

சுகாதாரப் பணியாளர்கள் பயன்படுத்தும் என். 95 முகக்கவசங்கள் போன்றவை குறிப்பிட்ட காலத்திற்குள் சுவாசிக்க கடினமான நிலையை ஏற்படுத்தும். எனவே, அதில் இடம்பெற்ற ஒரு சுவாச வால்வானது சுவாசிப்பதை எளிதாக்குகிறது. அந்த வகையான முகக்கவசங்களை அணிந்தவர் சுவாசிக்கும் போது வால்வு வழியாக காற்று வெளியேறும்போது அது வடிகட்டப்படாத காற்றை அனுமதிக்கிறது. இவ்வகையான முகக்கவசங்களை அணிந்தவர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவராக இருந்தால் அவர்கள் மூலமாக மற்றவர்களுக்கும் பரவும் ஆபத்தானது அதிகமாக இருக்கிறது.

வால்வுகள் கொண்ட முகக்கவசங்களுக்கு எதிரான மத்திய அரசின் ஆலோசனையானது மிகவும் தாமதமாக வருகிறது என்ற குற்றச்சாட்டும் எழுகிறது. ஏற்கனவே, வல்லுநர்கள் இந்த முகக்கவசங்களின் பயன்பாட்டிற்கு எதிராக சிறிது காலமாகவே தங்களுடைய அறிவுறுத்தலை வெளியிட்டு வருகின்றனர். குறிப்பாக COVID-19 நோயாளிகளுக்கு அருகாமையில் இருக்கும் முன்னணி மற்றும் சுகாதார ஊழியர்களுக்கு இவ்விவகாரம் தொடர்பான எச்சரிக்கையானது விடுக்கப்பட்டு இருக்கிறது.

0 0
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %