மதுரையில் நாளை (22/07/2020) மின்தடை ஏற்படும் பகுதிகள்! TNEB அறிவிப்பு!

Read Time:3 Minute, 2 Second
Page Visited: 522
மதுரையில் நாளை (22/07/2020) மின்தடை ஏற்படும் பகுதிகள்! TNEB அறிவிப்பு!

மதுரையில் பராமரிப்பு பணி காரணமாக கீழே குறிப்பிட்டுள்ள இடங்களில் நாளை (22 ஜூலை, புதன்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அறிவிப்பு

மதுரை எல்லீஸ்நகர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (புதன்கிழமை) நடைபெற உள்ளதால் எல்லீஸ்நகர், மகபூப்பாளையம், அன்சாரிநகர் 1-வது தெரு முதல் 7-வது தெரு வரை, டி.பி.கே.ரோடு, ரெயில்வே காலனி, கென்னட் ஆஸ்பத்திரி ரோடு, வைத்தியநாதபுரம், சர்வோதயா தெருக்கள், எல்லீஸ் நகர் குடிசைமாற்று வாரிய குடியிருப்பு, போடி லைன், பை-பாஸ் ரோடு, பழங்காநத்தம் ரவுண்டானா, வசந்தநகர், ஆண்டாள்புரம், அக்ரினி அபார்ட்மெண்டல், வசுந்தரா அபார்ட்மெண்டல், திடீர்நகர், பெரியார் பஸ் நிலையம், ஆர்.எம்.எஸ். மேலவெளி வீதி, மேலமாரட் வீதி, மேலப்பெருமாள் மேஸ்திரி வீதி, டவுன்ஹால்ரோடு, காக்காதோப்பு மற்றும் டவுன்ஹால் ரோடு சந்திப்பு முதல் மேலமாசி வீதி பிள்ளையார்கோவில் வரை ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும் என்று செயற்பொறியாளர் மோகன் தெரிவித்துள்ளார்.

மதுரை கூடல்நகரில் உள்ள ஆனையூர் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமணிநகர், கரிசல்குளம், பழைய மற்றும் புதிய விளாங்குடி, மீனாட்சிநகர், பாண்டியன் நகர், ஐ.ஓ.சி. நகர், வி.எம்.டபுள்யூ. காலனி, ரெயிலார் நகர், சங்கீத்நகர், சொக்கலிங்கநகர் 1 முதல் 13-வது தெரு, அகில இந்திய வானொலி நிலையம் மெயின் ரோடு, செல்லையாநகர் முழுவதும், ஆனையூர் செக்டார் (1, 2), ஜெ.ஜெ.நகர், சஞ்சீவி நகர், சாந்திநகர், பாசிங்காபுரம், வாகைக்குளம், கோவில்பாப்பாகுடி, சிக்கந்தர் சாவடி, பாத்திமா கல்லூரி பகுதி, பூதகுடி, லெட்சுமிபுரம், மிளகரணை ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் நிறுத்தி வைக்கப்படும் என்று செயற்பொறியாளர் ராஜாகாந்தி தெரிவித்துள்ளார்.

0 0
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %