அர்ச்சனை பூக்களின் அற்புத பலன்கள்… நினைத்தது நடக்க ‘ரோஜா பூ’…

Read Time:3 Minute, 45 Second
Page Visited: 618
அர்ச்சனை பூக்களின் அற்புத பலன்கள்… நினைத்தது நடக்க ‘ரோஜா பூ’…

இறைவனுக்கு மிகப்பெரிய செலவில் எதையும் செய்ய வேண்டியது இல்லை. மனதில் பக்தி, தூய்மையுடன் மலர்களை அர்ப்பணித்தாலே போதுமானது. நமக்காக இறைவன் இறங்குவார். பூக்களை கொண்டு இறைவனை அர்ச்சிப்பதை விட சிறப்பான வழிபாடு எதுவும் இல்லை என்றே சொல்லலாம்.

அதே நேரத்தில் பழைய பூக்கள், மலராத மொட்டுக்கள், தூய்மை இல்லாத பூக்களை கொண்டு இறைவனை அர்ச்சனை செய்ய விரும்ப வேண்டாம். அர்ச்சனை செய்த பூக்கள், வீட்டிலும் கோவிலில் சாமிக்கு போட்ட மாலைகளை காலில் மிதிபடாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். முடிந்தால் மொத்தமாக சேர்த்து வைத்து தூய்மையான ஓடுகின்ற தண்ணீரில் விடலாம். கோவிலில் சாமிக்கு போட்ட மாலைகளை வாகனங்களில் முன்பக்கம் கட்டுவது கூடாது.

திருமாலுக்கு பவளமல்லி, மரிக்கொழுந்து, துளசி ஆகிய மலர்ககள் மிகவும் சிறப்பானது. சிவனுக்கு வில்வ இலை, செவ்வரளிப் பூ ஆகியவையும் சிறப்பு வாய்ந்தவையாகும். முருகப்பெருமானுக்கு முல்லை, செவ்வந்தி, ரோஜா சூட்டலாம். அம்பாளுக்கு வெள்ளை நிற பூக்களை சாத்தி வழிபடுவது மகத்துவம் வாய்ந்ததாகும். இப்படி இறைவனுக்கும் சூடும் எந்தெந்த மலர்கள் என்ன சிறப்புகளை தரும் என்பதைப் பார்க்கலாம்.

காசாம்பூ & ஆவாரம் பூ
 • அல்லிப்பூ – செல்வம் பெருகும்
 • பூவரசம்பூ – உடல் நலம் பெருகும்
 • வாடாமல்லி – மரணபயம் நீங்கும்
 • மல்லிகை – குடும்ப அமைதி கிடைக்கும்
 • செம்பருத்தி – ஆன்ம பலம் கூடும்
 • காசாம்பூ – நன்மைகள் சேரும்
 • அரளிப்பூ – கடன்கள் அகலும்
 • அலரிப்பூ – இன்பமான வாழ்க்கை
 • ஆவாரம் பூ – நினைவாற்றல் பெருகும்
 • கொடிரோஜா – குடும்ப ஒற்றுமை
 • ரோஜா பூ – நினைத்தது நடக்கும்
 • மரிக்கொழுந்து – குலதெய்வம் அருள்
 • சம்பங்கி – இடமாற்றம் கிடைக்கும்
 • செம்பருத்தி பூ – நோயற்ற வாழ்வு
 • நந்தியாவட்டை – குழந்தை குறை நீங்கும்
 • சங்குப்பூ (வெள்ளை) – சிவப்பூஜைக்கு சிறந்தது
 • சங்குப்பூ (நீலம்) – விஷ்ணு பூஜைக்கு சிறந்தது
 • மனோரஞ்சிதம் – குடும்ப ஒற்றுமை
 • தாமரைப்பூ – செல்வம் பெருகும், அறிவு வளர்ச்சி பெறும்
 • நாகலிங்கப்பூ – லட்சுமி கடாட்சம், ஆரோக்கியம்
 • முல்லை பூ – தொழில் வளர்ச்சி, புதிய தொழில்கள் உண்டாகும்
 • பட்டிப்பூ (நித்திய கல்யாணி பூ) – முன்னேற்றம் பெருகும்
 • தங்க அரளி (மஞ்சள் பூ) – குருவின் அருள், பெண்களுக்கு மாங்கல்ய பலம் கிடைக்கும்.
 • பவள மல்லி – இது தேவலோக புஷ்பம். இந்த செடியினை வீட்டில் வளர்ப்பது மிக அவசியமான ஒன்றாகும். இதன்மூலம் தேவர்கள் மற்றும் ரிஷிகளின் அருளும், ஆசியும் கிடைக்கும்.
0 0
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
100 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %