நாளை 24-7-2020 ராகு-கேது தோஷம் போக்கும் நாக சதுர்த்தி…

Read Time:4 Minute, 24 Second
Page Visited: 627
நாளை 24-7-2020 ராகு-கேது தோஷம் போக்கும் நாக சதுர்த்தி…

நவக்கிரகங்களில் கேதுவும், ராகுவும் பாம்பு கிரகங்கள் என ஜோதிடம் குறிப்பிடுகிறது.

இந்த இரண்டு கிரகங்களாலும் ஏற்படும் நாகதோஷத்தால் மக்கள் பல அவதிக்குள்ளாவதாகவும் ஜோதிட சாஸ்திரங்கள் குறிப்பிடுகின்றன. இந்த தோஷம் இருந்தால் குழந்தை பாக்கியம் இல்லாமை உள்ளிட்ட பல இன்னல்களை சந்திக்க வேண்டியதிருக்கும். நாகதோஷத்தில் இருந்து மீள்வதற்கு நாக தேவதைகளை மனம் உருகி வழிபட வேண்டும்.

நாக தேவதைகளின் அருளால் இந்த தோஷங்கள் விலகி நல்ல பலன்களை பெறலாம் என்பது ஐதீகம்.

காசியப முனிவரின் மனைவிகளில் இருவரான வினதைக்கும், கத்ருவுக்கும் போட்டி ஏற்ப்ட்டுள்ளது. அப்போது, இந்திரனிடம் உள்ள குதிரையின் நிறம் வெண்மையா.. கருப்பா.. என்பதாக அவர்களின் வாதம் இருந்தது. யார் சொல்வது சரியோ.. அவர்களுக்கு மற்றவர் அடிமையாக வேண்டும் என்ற நிபந்தனையானது போட்டியில் இருந்தது. .

போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக கத்ரு தனது பிள்ளைகளான நாகர்களிடம் குதிரையின் வால்பகுதியில் போய் ஒட்டிக்கொள்ளும்படி கூறினாள். ஆனால், அதற்கு சில நாகங்கள் ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் கோபம் அடைந்த அவள், “நீங்கள் அனைவரும் ஜனமேஜயன் நடத்தும் வேள்வியில் விழுந்து அழிந்துபோவீர்கள்” என்று சாபம் கொடுத்து விட்டாள். அந்த சாபம் விரைவிலேயே பலிக்கும் படியான ஒரு சம்பவமும் நேரிட்டது.

பாம்புகளின் தலைவனாக விளங்கிய தட்சகன் என்ற கொடிய நாகத்தால் தீண்டப்பட்டு, பரீட்ஷித் என்ற மன்னன் இறந்ததும் அவரது மகன் ஜனமேஜயன், தன்னுடைய தந்தையின் இறப்புக்கு காரணமான பாம்பின் இனத்தையே அழிக்க சபதம் மேற்கொண்டான். அதற்காக வேள்வியையும் நடத்தினான். அந்த வேள்வி தீயில் உலகில் உள்ள அனைத்து நாகங்களும் வந்து விழுந்து இறந்துகொண்டிருந்தன.

சில நாகங்களே எஞ்சியிருந்த நிலையில் அஸ்தீகர் என்ற முனிவர், ஜனமேஜயனது யாகத்தை நிறுத்தினார். அவர், நாகர்களுக்கு சாப நிவர்த்தி கொடுத்தார். அவ்வாறு சாபநிவர்த்தி கொடுத்த நாள் ‘நாக சதுர்த்தி’ தினம் என சொல்லப்படுகிறது. எனவே, நாக விரதம் ஆடி மாத சதுர்த்தியில் கொண்டாடும் வழக்கமானது தோன்றியது. இந்த நாக சதுர்த்தி விரதத்தால் குழந்தை பாக்கியம் ஏற்படும் என்பது ஐதீகம்.

குழந்தை பாக்கியம் உள்ளவர்கள் இந்த விரதத்தை கடைப்பிடித்தால் புத்திரர்கள் நீண்ட ஆயுளுடன் வாழ்வார்கள். நாக சதுர்த்தி வழிபாட்டை செய்தால், ராகு-கேது தோஷங்கள் நீங்கும் என்பதும் ஐதீகம்.

இந்த நாளில் ராகு-கேதுவுக்கு அர்ச்சனை செய்வது பலன்களை தரும். கருட பஞ்சமிக்கு முன்தினத்தில் இந்த நாக சதுர்த்தி தினம் கடைப்பிடிக்கப் பட்டு வருகிறது. நாக சதுர்த்தியன்று நாக தேவதைக்கு பூஜை செய்து, புற்றுமண்ணை பிரசாதமாக இட்டு கொள்வார்கள். மேலும் அனந்தன், வாசுகி, கிஷகாலன், அப்ஜன், மகரி அப்ஜன், கங்குபாலன், கார்க்கோடன், குளிஜன், பத்மன் ஆகிய நாகங்களின் பெயர்களை சொல்லி வழிபடுவதும் சிறப்பான பலன்களை நல்கும்.

0 0
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %