கொரோனா வைரசின் மரபணு அமைப்பில் ஆயிரக்கணக்கான மாற்றம்… தடுப்பு மருந்து ஆய்வில் தாக்கத்தை ஏற்படுத்துமா….? விளக்கம்!

Read Time:4 Minute, 11 Second
Page Visited: 461
கொரோனா வைரசின் மரபணு அமைப்பில் ஆயிரக்கணக்கான மாற்றம்… தடுப்பு மருந்து ஆய்வில் தாக்கத்தை ஏற்படுத்துமா….? விளக்கம்!

இன்று உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் 7 மாதங்களுக்கு முன்னர் சீனாவில் காணப்பட்டது போன்று இல்லையென ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

ஒருநாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்கு செல்லும் போது கொரோனா வைரசின் குணாதிசியங்களும் மாற்றம் அடைவதாக அவர்களின் கூற்று இருக்கிறது. இந்த மாற்றங்களால் தான் அதிகமான பாதிப்பும், உயிரிழப்பும் உள்ளது என்ற விவாதமும் நிலவுகிறது. கொரோனா வைரஸ் தன்னுடைய மரபணு மாற்றங்களை வேகமாக மாற்றுகிறது.

இந்த வைரசுக்கு எதிராக இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தி, தடுப்பு மருந்து மற்றும் சிகிச்சை மருந்து இல்லாத காரணத்தினால் கொரோனா வைரஸ் தன்னை பெருமளவு தகவமைத்துக்கொள்ள வேண்டிய சூழலானது இப்போது நிலவவில்லை. இருப்பினும் இந்த வைரசில் இதுவரையில் ஆயிரக்கணக்கான மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதில் ஒரே ஒரு மாற்றம் மட்டுமே கொரோனா வைரசின் இயல்பை மாற்றுகிறது என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த மாற்றத்திற்கு D614G எனப் பெயரிட்டு உள்ளனர்.

இந்த மாற்றத்தினால் பெரும் ஆபத்து நேரிடுமா…? என்ற கேள்வி எழலாம். பெரும்பாலும் இனப்பெருக்கத்திற்காக வைரஸ்களின் மரபணுக்கள் மாறும். இவ்வாறு ஏற்படும் சில மரபணு மாற்றங்களுக்கு எந்தஒரு பன்புகளும் கிடையாது. அவை வைரஸ் பல்கிப்பெருகும் நடைமுறையின் போது ஏற்படும் துணைப்பொருள் என லண்டன் பல்கலைக்கழக கல்லூரியை சேர்ந்த டாக்டர் லூசிவான் தாஸ் கூறுகிறார். ஆனால், சில ஆய்வாளர்கள் மறுக்கின்றனர். அதாவது கொரோனா வைரசை பொறுத்தவரையில் அதில் ஏற்படும் மாற்றமானது வைரசுக்கு பலத்தை கூட்டுகிறது என்று தெரிவிக்கின்றனர்.

இப்போது பரவும் கொரோனா வைரசானது மனித உடலில் வேகமாக நுழையும் மரபணு கட்டமைப்பினை கொண்டிருக்கிறது என ப்ளோரிடாவில் இருக்கும் ஸ்கிரிப் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இப்போது பரவும் கொரோனா வைரசானது வேகமாக பரவுகிறது என ஆய்வாளர்கள் கூறினாலும், ஊரடங்கும் அதில் தொற்று பரவலுக்கான பிற விரிசல்களும் பார்க்க வேண்டிய அவசியமிருக்கிறது. ஆனால், கொரோனா வைரசில் ஏற்படும் மாற்றமானது மக்களிடம் வேகமாக பரவ பெரும் காரணமாக இருக்கலாம் எனவும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மரபணு மாற்றம் தடுப்பூசி மருந்து தயாரிப்பில் பாதிப்பை ஏற்படுத்துமா…?

கொரோனா வைரசை பொறுத்தவரையில் அதன் மேல்பகுதியில் இருக்கும் முட்கள் போன்று இருக்கும் ஸ்பைக் புரதமே மனித உடலுக்குள் நுழைய பெரும் உதவியாக இருக்கிறது. இதனையும், இதனை அடிப்படையாக கொண்ட மூலப்பொருட்களை அடிப்படையாக கொண்டே தடுப்பூசி மருந்து தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே, மரபணு மாற்றமானது எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றே கருதப்படுகிறது.

0 0
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %