தொடர்ந்து சீன செயலிகளுக்கு இந்தியாவில் தடை விதிப்பு… ‘உங்கள் தவறை திருத்திக்கொள்ளுங்கள்…’ என பாயும் சீனா… விபரம்:-

Read Time:5 Minute, 32 Second
Page Visited: 277
தொடர்ந்து சீன செயலிகளுக்கு இந்தியாவில் தடை விதிப்பு…  ‘உங்கள் தவறை திருத்திக்கொள்ளுங்கள்…’ என பாயும் சீனா… விபரம்:-

கிழக்கு லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவத்தின் அத்துமீறலை தொடர்ந்து, கடந்த மாதம் 29-ம் தேதி, சீனாவுடன் தொடர்புடைய 59 மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. இதில், க்டாக், ஹலோ, யுசி பிரவுசர், ஷேர்இட், லைக்கீ, வீகோ வீடியோ, பிகோ லைவ், கிளாஷ் ஆப் கிங்ஸ் ஆகியவை தடை செய்யப்பட்ட செயலிகளில் குறிப்பிடத்தக்கவை ஆகும்.

நாட்டின் பாதுகாப்புக்கும், இறையாண்மைக்கும் இந்த செயலிகள் அச்சுறுத்தலாக இருப்பதால் தடை செய்யப்படுவதாக மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் அப்போது தெரிவித்தது.

மேலும், தடையை மீறி செயல்பட்டால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த செயலிகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்தது.

47 செயலிகள்

இந்நிலையில் சீனாவுடன் தொடர்புடைய மேலும் 47 மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசு ஜூலை 27-ம் தேதி தடை விதித்தது. இந்த செயலிகள், ஏற்கனவே தடை செய்யப்பட்ட செயலிகளின் நகலாகவும், அவற்றை நடத்திய நிறுவனங்களின் தயாரிப்பாகவும் உள்ளதால், இந்த தடை நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதில், டிக்டாக் லைட், ஷேர்இட் லைட், பிகோ லைவ் லைட், ஹலோ லைட் ஆகியவை தடை செய்யப்பட்ட செயலிகளில் அடங்கும். 47 செயலிகளின் முழு பட்டியல் வெளியிடப்படவில்லை. இதையடுத்து இந்தியாவில் தடை செய்யப்பட்ட சீன மொபைல் செயலிகளின் எண்ணிக்கை 106 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், சீனாவை சேர்ந்த 250 செயலிகளை மத்திய அரசு கண்காணித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

சீனா பாய்ச்சல்

சீன செயலிகளுக்கு இந்தியாவில் தடையென்பது அந்நாட்டிற்கு பெரும் இழப்பாகவே மாறியிருக்கிறது. இந்நிலையில் செயலிகள் தடை விதிப்பு விவகாரத்தில் இந்தியா தவறுகளை திருத்திக்கொள்ள வேண்டும் என எச்சரிக்கை விடுக்கும் தோணியில் சீனா பதில் உரைத்து இருக்கிறது.

சீன தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜி ரோங் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வி சாட்” செயலி பயன்பாட்டுக்கு தடைசெய்யப்பட்ட விஷயம் இந்திய தரப்பிடம் எடுத்துச் செல்லப்பட்டு உள்ளது. செயலிகள் தடைவிதிப்பு தொடர்பான செய்திகளை நாங்கள் கவனித்திருக்கிறோம். ஜூன் 29-ல் சீன நிறுவனங்களின் நியாயமான உரிமைகள் மற்றும் நலன்களை கடுமையாக சேதப்படுத்தும் வகையில் வி சாட் உள்ளிட்ட சீன பின்னணியுடைய 59 மொபைல் செயலிகள் பயன்பாட்டை இந்திய அரசு தடை செய்தது. சீன தரப்பு இந்திய தரப்பிடம் இவ்விவகாரத்தை எடுத்துச் சென்றிருக்கிறது. மேலும், தவறுகளை சரிசெய்ய இந்திய தரப்பிடம் கேட்டுக்கொண்டுள்ளோம்”என்று தெரிவித்து உள்ளார்.

மேலும், சீன செயலிகள் விவகாரத்தில் சர்வதேச விதிகள் மற்றும் நெறிமுறை நடைமுறைகளை இந்திய பின்பற்ற வேண்டும் என்று சீனா கூறியிருக்கிறது.

“வெளிநாடுகளில் அந்நாட்டின் ஒத்துழைப்புடன் தொழிலை மேற்கொள்ளும் போது சர்வதேச விதிகள் மற்றும் உள்ளூர் சட்டங்கள், விதிமுறைகளுக்கு கட்டுப்பட வேண்டும் என்று சீன அரசு தொடர்ந்து எங்கள் நாட்டு நிறுவனங்களை கேட்டுக்கொள்கிறது என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். சீன முதலீட்டாளர்கள் உள்பட சர்வதேச முதலீட்டாளர்களின் நியாயமான உரிமைகள் மற்றும் நலன்களை பாதுகாக்கும் பொறுப்பு இந்திய அரசாங்கத்திற்கு உள்ளது,” எனவும் வலியுறுத்தியிருக்கிறார்.

செயலிகள் தடை விவகாரத்தில் இந்தியாவின் நகர்வுகளை “வேண்டுமென்றே தலையிடுவது” என்று குற்றம் சாட்டும் சீனா, சீன நிறுவனங்களுக்கு எதிரான இத்தகைய பொருளாதாரத் தடைகள் இந்தியாவின் நலன்களுக்கு உதவியாக இருக்காது. சீன நிறுவனங்களைப் பாதுகாக்க பெய்ஜிங் எல்லாவற்றையும் செய்யும் என்றும் கூறியிருக்கிறார்.

0 0
Happy
Happy
100 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %