கொரோனா வைரஸ் தொற்று சோதனையில் நாய்கள்… 94% துல்லிய ஆய்வு முடிவுகள்.. விபரம்:-

Read Time:4 Minute, 6 Second
Page Visited: 317
கொரோனா வைரஸ் தொற்று சோதனையில் நாய்கள்… 94% துல்லிய ஆய்வு முடிவுகள்.. விபரம்:-

கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புகளை கண்டறிய சளி மாதிரி சோதனைகள் மற்றும் ஆன்டிபாடி சோதனைகளுக்கு அப்பால், ஜெர்மன் கால்நடை பல்கலைக்கழகம் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண ஒரு புதிய வழியை கண்டறிந்துள்ளது. இதற்காக நாய்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது.

மனிதர்களுக்கு பரவி உயிரை குடித்துவரும் கொரோனா வைரஸ் விலங்குகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. ஏற்படுத்தவும் செய்யாது என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். விலங்குகள் இந்த வைரசை எதிர்க்கும் நோய் எதிர்ப்பு சக்தியை இயல்பாகவே கொண்டிருக்கிறது என தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் நோயாளிகளை கண்டறியும் சோதனையின் மோப்ப நாய்களை பயன்படுத்தும் திட்டங்கள் ஐரோப்பிய நாடுகளில் முன்னெடுக்கப்பட்டது.

இப்போது ஜெர்மனியில் மோப்ப நாய்கள் உதவியுடன் நோயாளிகள் கண்டுபிடிப்பு 94% துல்லியமாக இருப்பதாக ஆய்வு முடிவு வெளியாகியிருக்கிறது.

ப்ளூம்பெர்க் செய்தியில் ஜெர்மன் ஆயுதப்படைகளை சேர்ந்த எட்டு நாய்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றை கண்டுபிடிக்க ஒரு வாரம் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. ஹன்னோவர் கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம், அந்நாய்களுக்கு முன்னர் 1,000 பேரை நிறுத்தியுள்ளது. அப்போது நாய்கள் கொரோனா வைரஸ் தொற்று உள்ளவர்களை 94% துல்லியத்துடன் அடையாளம் கண்டுள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டவர்கள் உள்பட 1000 பேர் இந்த பரிசோதனையில் எடுத்துக்கொள்ளப்பட்டு உள்ளனர். அவர்களின் சளி மாதிரிகளை மோப்பம் பிடித்த நாய்கள் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் கண்டிருக்கிறது என தெரிவிக்கப்படுகிறது.

இந்த ஆய்வில் பங்குபெற்றிருந்த பேராசிரியர் ஒருவர் பேசுகையில், ஒரு கொரோனா வைரஸ் நோயாளியின் வளர்சிதை மாற்றம் முற்றிலும் வேறுபட்டது மற்றும் நாய்களால் இந்த வித்தியாசத்தை வாசனை மூலம் கண்டறிய முடிகிறது. நாய்கள் மனிதர்களை விட 1,000 மடங்கு வலிமையானவை என தெரிவித்து உள்ளார். விமான நிலையங்கள், எல்லை சோதனை சாவடிகள் மற்றும் அரங்கங்கள் மற்றும் பிற பிஸியான பகுதிகளில் சந்தேகத்திற்கிடமான கொரோனா வைரஸ் அறிகுறியுள்ளவர்களை சோதனை செய்ய நாய்களை பயன்படுத்த இந்த கண்டுபிடிப்பு உதவும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.

இந்த ஆய்வை ஜெர்மன் ஆயுதப்படைகள் மற்றும் ஹன்னோவர் கால்நடை பல்கலைக்கழ்கம் இணைந்து நடத்தியிருக்கிறது. கொரோனா வைரஸ் தொற்று மற்றும் இன்ஃப்ளூயன்ஸா போன்ற பிற நோய்களுக்கு இடையில் இருக்கும் வேறுபடுகளை கண்டறிய நாய்களுக்கு பயிற்சியளிப்பதே அடுத்த கட்ட நடவடிக்கையாக இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

0 0
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %