இந்தியா வரும் 5 ரபேல் போர் விமானங்களுக்கு வானில் 30 ஆயிரம் அடி உயரத்தில் எரிபொருள் நிரப்பப்பட்டது… புகைப்படங்கள்…

Read Time:3 Minute, 54 Second
Page Visited: 283
இந்தியா வரும் 5 ரபேல் போர் விமானங்களுக்கு வானில் 30 ஆயிரம் அடி உயரத்தில் எரிபொருள் நிரப்பப்பட்டது… புகைப்படங்கள்…

இந்திய விமானப்படைக்கு பிரான்சில் இருந்து 36 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்காக கடந்த 2016-ம் ஆண்டு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

ரூ.59 ஆயிரம் கோடிக்கு வாங்கப்படும் இந்த விமானங்களை பிரான்சின் டசால்ட் நிறுவனம் தயாரித்து வழங்குகிறது.தாக்குதல் ரகத்தை சேர்ந்த இந்த 36 விமானங்களில் 6 விமானங்கள் பயிற்சி விமானங்களாகும். இருப்பினும், அவற்றிலும் பிற விமானங்களில் இருப்பதுபோன்ற அனைத்து அம்சங்களும் இருக்கும்.

இந்த 36 விமானங்களும் அடுத்த ஆண்டு (2021) இறுதிக்குள் வழங்க வேண்டும் என ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதில் முதல் 10 விமானங்களின் தயாரிப்பு பணிகள் நிறைவடைந்து இருக்கிறது. இந்த 10 விமானங்களில் 5 விமானங்கள் பயிற்சிக்காக பிரான்சிலேயே இருக்கும் நிலையில், மீதமுள்ள 5 விமானங்கள் முதல் பிரிவாக இந்தியா வருகிறது. அவை 27-ம் தேதி பாரீசில் இருந்து இந்தியாவை நோக்கி தனது பயணத்தை தொடங்கியது.

இந்த விமானங்களை இயக்குவதற்காக சிறப்பான பயிற்சி பெற்றுள்ள இந்திய விமானப்படை அதிகாரிகள், இந்த விமானங்களை இந்தியாவுக்கு கொண்டு வருகின்றனர்.

இந்தியா-பிரான்ஸ் இடையேயான 7 ஆயிரம் கி.மீ. தூரத்தை வெற்றிகரமாக கடந்து இன்று (புதன்கிழமை) 5 விமானங்களும் இந்தியா வந்து சேர்கின்றன. வரும் வழியில் வானிலேயே எரிபொருளும் நிரப்பிக்கொள்ளப்பட்டது.

இந்திய விமானப்படையின் நம்பர்-17 ஸ்குவார்டன் படைப்பிரிவில் அதாவது கோல்டன் ஆரோஸ் எனும் பிரிவில் ரபேல் போர் விமானங்கள் சேர்க்கப்பட உள்ளன. இடையில் அமீரகத்தில் உள்ள பிரான்ஸ் நாட்டு விமானப்படை தளத்தில் தரையிறங்கியது. இன்று பிற்பகல் 2 மணி அளவில் அரியானாவின் அம்பாலா விமானப்படை தளத்தில் தரையிறங்குகின்றன. இந்திய ரபேல் போர் விமானங்கள் பறந்து கொண்டிருந்த போது பிரான்ஸின் டேங்கர் விமானம் வானில் நடுவழியில் 30 ஆயிரம் அடி உயரத்தில் எரிபொருளை நிரப்பி உள்ளன. அந்த புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து இந்தியத்தூதரகம் வெளியிட்ட டுவிட்டர் பதிவில் “ 30 ஆயிரம் அடி உயரத்திலிருந்து சில புகைப்படங்கள். இந்தியா செல்லும் ரபேல் போர் விமானங்களுக்கு பிரான்ஸ் ராணுவத்தின் விமானம் எரிபொருள் நிரப்பும் காட்சி” என தெரிவித்து இருக்கிறது.

மேலும் இந்திய விமானப்படை டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில் “ இந்தியா வரும் நம்முடைய ரபேல் போர் விமானங்களுக்கு வானில் நடுவழியில் எரிபொருள் நிரப்பிய பிரான்ஸ் விமானப்படையின் செயலை பாராட்டுகிறோம்” என தெரிவித்து உள்ளது.

0 0
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %