இந்தியாவின் ரபேலா… சீனாவின் J-20யா… சிறந்த போர் விமானம் எது…? ஒரு அலசல்

Read Time:11 Minute, 3 Second

இந்திய விமானப்படைக்கு பிரான்சில் இருந்து 36 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்காக கடந்த 2016-ம் ஆண்டு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இதில் முதல் தொகுதியாக 5 ரபேல் போர் விமானங்களை ஜூலை 29-ல் இந்தியா வந்தடைந்தது.

எல்லையில் இந்தியா – சீனா இடையே மோதல் போக்கு காணப்படும் நிலையில் ரபேல் விமானங்கள் வருகையானது இந்தியப்படைகளுக்கு கூடுதல் வலுசேர்ப்பதாக இருக்கும்.

சீன ராணுவத்திடம் சுகோய் எஸ்யூ -27, எஸ்யூ -30 எம்.கே.கே மற்றும் எஸ்யூ -35 எஸ், செங்டு ஜே -7 மற்றும் செங்டு ஜே -10 உள்ளிட்ட பல விமானங்கள் இருக்கிறது. இப்போது இந்திய விமானப்படையிடம் இருக்கும் ரபேல் விமானம் தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட நவீன விமானங்களில் ஒன்றாகும். இவ்விமானத்தை சீனா தன்னுடைய நவீன போர் விமானம் எனக்கூறும் செங்டு ஜே -20 ( Chengdu J-20) விமானத்துடன் ஒப்பீட்டு பார்க்கலாம்…

தயாரிப்பு

ரபேல் விமானம் பிரான்சின் டசால்ட் நிறுவனத்தின் தயாரிப்பாகும். இவ்விமானம் இரட்டை இயந்திரம், canard delta wing கொண்ட மல்டி-ரோல் போர் விமானம் ஆகும். இவ்விமானம் 4.5 தலைமுறை பிரிவு விமானமாக கருதப்படுகிறது.

சீனாவின் ஜே -20 விமானமானது ஒற்றை இருக்கை, இரட்டை இயந்திரம் கொண்டது. இவ்விமானம் அனைத்து வானிலையிலும் பறக்கக்கூடியது, திருட்டுத்தனமாகவும் பிரவேசிக்கும் ஆற்றல் கொண்டது என ‘சீனா கூறுகிறது.’ இவ்விமானம் 5 வது தலைமுறை போர் விமானமாக பார்க்கப்படுகிறது. இந்த விமானத்தை சீனாவின் செங்டு ஏரோஸ்பேஸ் கார்ப்பரேஷன் உருவாக்கியிருக்கிறது.

இரண்டு போர் விமானங்களின் விவரக்குறிப்பு

ரபேல் விமானத்தில் ஒரு தடவை எரிபொருளை நிரப்பினால் 3,700 கி.மீ. தூரம் வரையில் செல்லலாம்.சீன விமானம் எவ்வளவு தூரம் செல்லும் என்பது தொடர்பான தகவல் தெரிவிக்கப்படவில்லை.
ரபேல் மணிக்கு 2130 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும். 15,235 மீட்டர் உயரம் வரையில் செல்லும்.சீன விமானம் மணிக்கு 2,223 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும், சீன விமானம் 20,000 மீட்டர் உயரம் செல்லும்.
ரபேல் விமானம் 15.27 மீட்டர் நீளமும், 10.80 மீட்டர் அகலமும், 5.34 மீட்டர் உயரமும் கொண்டது. விமானம் 10.3 டன் எடைக்கொண்டது. அதிகப்பட்சமாக 24.5 டன் எடையை தாங்கும்.சீன விமானம் 20.4 மீட்டர் நீளமும், 13.5 மீட்டர் அகலமும், 4.45 மீட்டர் உயரமும் கொண்டது. விமானம் 19.4 டன் எடைக்கொண்டது. அதிகப்பட்சமாக 36 டன் எடையை தாங்கும்.

ரபேல் Vs ஜே20 ராடார் & ஏவியோனிக்ஸ்

வானில் எதிரி விமானங்கள் அல்லது வேறு எந்த இலக்குகளையும் கண்டறிய ரேடார் அமைப்புகள் விமானங்களில் பயன்படுத்தப்படுகின்றன. ஜே-20 இல் பயன்படுத்தப்படும் ரேடார் குறித்து சீனா எந்த அதிகாரப்பூர்வ தகவலையும் இதுவரையில் வெளியிடவில்லை. இருப்பினும், தகவல்களின்படி, இந்த போர் விமானம் ஒரு செயலில் மின்னணு முறையில் ஸ்கேன் செய்யப்பட்ட வரிசையை (AESA) பயன்படுத்துகிறது எனக் கூறப்படுகிறது. விமானம் மூலம் 360 டிகிரி கோணத்தில் ஸ்கேன் செய்ய விமானத்தில் ஏ.இ.எஸ்.ஏ என்ற ரேடார் பொருத்தப்படுகிறது. அதே ரேடார் முறை ரபேல் விமானத்திலும் உள்ளது. AESA உலகின் மிக முன்னேறிய ரேடார் தொழில்நுட்பங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

ரபேல் விமானம்.

இந்த ரேடார் கட்டமைப்பை கொண்டதால் சமமான திறன்கள் உள்ளன என்று அர்த்தமா…? என்றால் உண்மையில் கிடையாது. வெவ்வேறு ஏவியோனிக்ஸ் மற்றும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி ரேடார் அமைப்பு எவ்வாறு உகந்ததாக இருக்கிறது என்பது எல்லாவற்றையும் வேறுபடுத்துகிறது.

ரபேல் விமானத்தில் இருக்கும் ‘ஸ்பெக்ட்ரா ரேடார் கட்டமைப்பு’ விமானத்தை வான்வழி மற்றும் தரை அச்சுறுத்தல்களில் இருந்து பாதுகாக்கிறது. இந்த ஸ்பெக்ட்ரா அமைப்பு விமானத்தை எதிரிகள் விமானம் கண்டுபிடிக்காத வகையில் ரேடார், இன்ப்ராரெட்களை ஜாம் செய்கிறது. ஏதாவது ஏவுகணையானது விமானத்தை தாக்குவதற்கு வந்தால் செயற்கையான மின்காந்த அலைகளை உருவாக்கி ஏவுகணையை திசைத்திருப்பிவிடும். சிறப்பாக பகுப்பாய்வு செய்திறன் கொண்ட ரபேல் விமானத்தை சுட்டு வீழ்த்துவது என்பது மிகவும் கடினமானது.

மறுபுறம் சீனாவின் ஜே 20-ன் விமானத்தின் AESA ரேடார் அகச்சிவப்பு / எலக்ட்ரோ-ஆப்டிக் தேடல் மற்றும் டிராக் சென்சார் உடன் வருகிறது. ஜே-20 விமானத்தில் இடம்பெறும் எலக்ட்ரோ-ஆப்டிகல் கண்டறிதல் கட்டமைப்பானது அதன் பைலட்டுகளுக்கு போர்க்களத்தின் 360 டிகிரி கவரேஜை அளிக்கிறது என்றும் சீனர்கள் கூறுகின்றனர். இந்த விமானம் சீன இராணுவ செயற்கைக்கோள்களிலிருந்து நிகழ்நேர தரவை அணுகும் திறன் கொண்டது என்றும் கூறப்படுகிறது.

தாக்கும் திறன்

இரண்டு விமானங்களும் மேம்படுத்தப்பட்ட மற்றும் மல்டி-ரோல் விமானங்கள் என்பதால், அவை வானிலிருக்கும் இலக்கையும், தரை இலக்கையும், நெடுந்தூர ஆழ்ந்த துல்லிய தாக்குதலையும், கப்பல் எதிர்ப்பு தாக்குதலையும் நடத்தும் வல்லமைக்கொண்டவை மற்றும் அணுசக்தி தடுப்பு பணிகளையும்மேற்கொள்ளும் திறன் கொண்டவையாகும். இந்த பணிகளை ஒவ்வொன்றும் செய்வதற்கு அதற்கான ஆயுதங்களையும் வரிசையாக கொண்டிருக்கின்றன. SCALP என்பது ஒரு தரை தாக்குதலை துல்லியமாக முன்னெடுக்கும் ஆயுதமாகும், நெடுந்தொலைவில் இருக்கும் இலக்கையும் தாக்கும் ஏவுகணையை கொண்டிருக்கும். ரபேல் விமானத்திற்கு இணையான இந்த கட்டமைப்பு சீன விமானத்திலும் இருப்பதாக கூறப்படுகிறது. ரபேல் விமானம் சிறப்பான கட்டமைப்பை கொண்டிருக்கிறது.

சீன விமானம் 5-ம் தலைமுறை விமானமா…?

ஜே -20 விமானம் ஐந்தாவது தலைமுறை விமானம் என்று சீனர்கள் கூறுகின்றனர். அதாவது, இது திருட்டுத்தனமாக மற்றொரு பிராந்தியத்திற்குள் நுழையும் திறனை கொண்டுள்ளது எனக் கூறப்படுகிறது. திருட்டுத்தனமாக நுழையும் போது பிற ராடாரில் சிக்காத வகையிலும், எதிரிநாட்டு விமானங்களிடம் சிக்காத வகையிலும் செல்லும் எனக் கூறப்படுகிறது.

சீனாவின் ஜே 20 விமானம்.


இது எதிரி நாட்டு விமான ரேடாரில் உள்ள ரேடார் குறுக்குவெட்டை குறைக்கிறது எனவும் கூறப்படுகிறது. திருட்டுத்தனமான நுழையும் தொழில்நுட்பத்தின் காரணமாக தங்களது எஃப் -22 ராப்டார் போர் விமானம் மற்றவர்களை விட முன்னிலையில் இருப்பதாக அமெரிக்கா கூறியிருந்தது. இருப்பினும், 2009-ல் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஒரு பயிற்சியின் ரபேல் விமானம் அமெரிக்காவின் எஃப் -22 விமானத்தின் ராப்டாரை வெற்றிகரமாக கண்காணித்து இல்லைக்கை துல்லியமாக கண்டிபிடித்தது.

சீனா ஜே -20 விமானமானது அமெரிக்காவின் எஃப் -22 ராப்டார் விமானத்தின் மாதிரியாக வடிவமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், இந்திய விமானப்படை தனது சுகோய் -30 எம்.கே.ஐ. விமானங்களால் சீனாவின் ஜே -20 விமானத்தின் ரேடாரை கணிக்க முடிந்தது என தெரிவித்து உள்ளது. எனவே சீனாவின் ஜே -20 விமானத்தின் ‘திருட்டுத்தனமாக’ நுழையும் தொழில்நுட்பத்தின் செயல்திறன் குறித்து சில நியாயமான சந்தேகங்கள் இருப்பதாக தெரிகிறது.

அதே நேரத்தில், ரபேலில் திருட்டுத்தனமாக நுழையும் தொழில்நுட்பம் கிடையாது. எதிரிநாட்டு விமானத்தின் ரேடாரை சிதைக்கும் திறனை கொண்டிருக்கிறது. ரபேல் விமானத்தில் இருக்கும் ஸ்பெக்ட்ரா தொழில்நுட்பத்துடன் ஒப்பீடும் போது சீனாவின் ஜே -20 விமனம் புதியதாக எந்தஒரு சண்டை ஆயுதத்த நன்மையையும் பெற்றிருக்கவில்லை.

போர் அனுபவம்

சீனாவின் ஜே 20 விமானங்கள் இதுவரையில் போர்க்களங்களை பார்க்கவில்லை. ஆனால், ரபேல் விமானம் ஆப்கானிஸ்தான், லிபியா, மாலி, மத்திய ஆப்பிரிக்க குடியரசு, ஈராக் மற்றும் சிரியாவில் போரில் ஈடுபடுத்தப்பட்டு இருக்கிறது. சீனாவின் விமானம் எந்த போரையும் இதுவரை சந்திக்காத காணாததால் அதனுடைய செயல் திறன்கள் தற்போது காகிதத்தில் மட்டுமே உள்ளன.

இருப்பினும், இந்த விமானங்கள் போரில் சந்திக்கும் போது அதன் முடிவை தீர்மானிக்கும் காரணியாக தொழில்நுட்பங்கள் மட்டும் இருப்பது கிடையாது. விமானிகளின் பயிற்சி, எதிரெதிர் விமானங்களுடன் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்த அவர்களின் தந்திரோபாய திட்டமிடல் நிலை மற்றும் போரின் மன அழுத்தத்தில் அவர்களின் உடனடி மற்றும் துல்லிய பதிலடி ஆகியவை வெற்றியை முடிவை தீர்மானிப்பதில் சமமான முக்கிய பங்கை வகிக்கிறது.