எல்லை மற்றும் இணையையும் பாதுகாத்துக்கொள்வதற்காக மோதிக்கொள்ளும் இரு நாகங்கள்.. வைரல் வீடியோ:-

Read Time:2 Minute, 24 Second

இரண்டு பெரிய பாம்புகள் சண்டையிடும் காட்சிகள் அடங்கிய வீடியோ இன்று காலை சமூக வலைதளத்தில் பகிரப்பட்டதிலிருந்து பெரும் கவனத்தை ஈர்த்து இருக்கிறது.

இந்த வீடியோவை டுவிட்டரில் இந்திய வனத்துறை அதிகாரி சுசாந்தா நந்தா வெளியிட்டு இருக்கிறார். இந்த பாம்புகளை ரேட் பாம்புகள் என்றும் அடையாளம் குறிப்பிட்டு இருக்கிறார்.

இந்த வீடியோவை இணைத்து கருத்து பதிவு செய்திருக்கும் சுசாந்தா நந்தா, இரண்டு பாம்புகளும் தங்களுடைய பகுதியையும், இணையையும் பாதுகாத்துக்கொள்வதற்காக சண்டையிடுகிறது எனக் குறிப்பிட்டு இருக்கிறார். இந்த வீடியோவை ஆயிரக்கணக்கானோர் பார்த்து பகிர்ந்து வருகின்றனர். மேலும், பாம்புகள் இனச்சேர்க்கையின்போது இப்படிதான் காட்சியளிக்கும் கருத்துக்களுக்கு மறுப்பு தெரிவித்து உள்ளார். இது பாம்புகள் சண்டையிடும் காட்சிகளாகும் எனக் குறிப்பிட்டு இருக்கிறார்.

வீடியோவில் இரண்டு பெரிய பாம்புகளுக்கிடையேயான சண்டையானது முதலில் தண்ணீரில் தொடங்குகிறது. சிறிய சிற்றோடையில் நீந்தும்போது ஒன்றுக்கொன்று தங்களை சுற்றிக் கொண்டு ஆவேசமாக தாக்க முற்படும் காட்சியானது அதில் இடம்பெற்று உள்ளது. இரு பாம்புகளும் தண்ணீரைவிட்டு வெளியேறும் போதுதான் அவைகளின் உண்மையான அளவு தெளிவாக தெரிந்தது. இரண்டு பெரிய பாம்புகள் தங்களுடைய பிராந்திய பாதுகப்பில் ஈடுபடும்போது ஒருவருக்கொருவர் தங்களை சுற்றிக் கொண்டு மோதுவதை வீடியோவில் பார்கலாம்.

இரண்டு ஆண் பாம்புகள் ஒன்றின் மீது ஒன்று இருக்கி எதிரி விழும்வரை தாக்கிக்கொள்ளும் இதனை “பிளேட்டிங் போர்” என்று அழைக்கப்படுகிறது என நேஷனல் ஜியோகிராஃபிக் தெரிவிக்கிறது.