உகானில் கொரோனாவில் குணமானவர்களில் 90 % பேருக்கு நுரையீரல் பாதிப்பு – அதிர்ச்சி ரிப்போர்ட்…!

Read Time:3 Minute, 41 Second
Page Visited: 200
உகானில் கொரோனாவில் குணமானவர்களில் 90 % பேருக்கு நுரையீரல் பாதிப்பு – அதிர்ச்சி ரிப்போர்ட்…!

உலகம் முழுவதும் இன்று கொரோனா வைரஸ் தொற்று மனித குலத்திற்கு ஒரே எதிரியாகியிருக்கிறது. இந்த வைரஸ் தொற்றினால் மக்கள் பாதிக்கப்படுவதும், உயிரிழப்பதும் தொடர்கதையாகி வருகிறது. கொரோனாவின் கதையை முடிக்க இதுவரையில் மருந்து எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. மருந்துகள் பரிசோதனையிலேயே இருக்கிறது.

இதற்கிடையே கொரோனா தன்னுடைய பலத்தை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமின்றி பாதிக்கப்பட்டு குணம் அடைந்தவர்களின் உடல் உறுப்புக்களிலும் பாதிப்பு இருக்கிறது என்ற ஆய்வு முடிவுகளும் அதிர்ச்சிகரமான தகவல்களுடன் வெளியாகி வருகிறது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்ட சீனாவின் உகான் நகரில், இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 90 சதவீதம் பேரின் நூரையீரல் பாதிக்கப்பட்டு உள்ளது; சிலர் சுவாசிக்க பிற்காலத்தில் ஆக்ஸிஜன் இயந்திரங்களை நம்பியிருக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டு இருக்கிறது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது.

உகான் பல்கலைக்கழகத்தின் ஜாங்கான் மருத்துவமனையின் இயக்குனர் பெங் ஜியோங் தலைமையிலான மருத்துவ குழு இதுதொடர்பான ஆய்வை மேற்கொண்டு உள்ளது.

ஏப்ரல் தொடக்கத்தில் கொரோனாவில் இருந்து ‘மீட்கப்பட்ட 100 நோயாளிகளை’ தொடர்ந்து கண்காணித்து உள்ளனர். அதில் இந்த அதிர்ச்சி தகவலானது வெளியாகியிருக்கிறது.

பெங் ஜியோங் கூறுகையில், ஆராய்ச்சியின் கண்டுபிடிப்புகள் மிகவும் திடுக்கிட வைக்கின்றன. கொரோனாவில் இருந்து மீட்கப்பட்ட நோயாளிகளால் ஆறு நிமிடங்களில் 400 மீட்டர் மட்டுமே நடக்க முடிகிறது. இதுவே, இதேநேரத்தில் 500 மீட்டர் தூரத்தை ஆரோக்கியமான நபர்கள் கடக்கிறார்கள். இது நோயாளிகளுடனான நடைபயிற்சி சோதனையின் அடிப்படையில் தெரியவந்திருக்கிறது.

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மீட்கப்பட்ட சில நோயாளிகள் மருத்துவமனையிலிருந்து வெளியேறிய பின்னர் மூன்று மாதங்களுக்கு பிறகும் ஆக்ஸிஜன் இயந்திரங்களை நம்ப வேண்டியிருக்கிறது என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

கொரோனா வைரசில் இருந்து குணம் அடைந்துவிடலாம் என்றாலும் உடல் உறுப்புகளின் பாதிப்பு அதிர்ச்சிகரமானதாகவே இருக்கிறது. எனவே, தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டியது நம்முடைய கடமையாகும்.

0 0
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %