கோழிக்கோடு விபத்து: ‘டேபிள் டாப்’ விமான நிலையம் என்றால் என்ன…? விமானம் 2 ஆக உடைந்தது ஏன்…?

Read Time:6 Minute, 13 Second
Page Visited: 511
கோழிக்கோடு விபத்து: ‘டேபிள் டாப்’ விமான நிலையம் என்றால் என்ன…? விமானம் 2 ஆக உடைந்தது ஏன்…?

கோழிக்கோடு விமான நிலையத்தில் #AirIndiaExpress விமானம் விபத்துக்குள்ளான சம்பவத்தில் 19 பேர் உயிரிழந்து உள்ளனர். பலத்த மழை பெய்து கொண்டிருந்த போது தரையிறங்க முற்பட்டதால் விமானம் விபத்துக்கு உள்ளானது எனவும் குடும்பத்துக்குள் சிக்கிய விமானநிலையம் ‘டேபிள் டாப்’ விமான நிலையமாக இருப்பதும் காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

‘டேபிள் டாப்’ விமான நிலையம் என்றால் என்ன…?

பெரும்பாலும் விமான நிலையங்கள் சமதள நிலப்பரப்புகளில் அமைந்து இருக்கும். ஆனால் மலைக்குன்றுகள் அல்லது உயரமான இடங்களிலும் சில விமான நிலையம் அமைக்கப்படும். இவ்வாறு அமைக்கப்படும் விமான நிலையங்கள் ‘டேபிள் டாப்’ விமான நிலையம் என்று அழைக்கப்படுகிறது. மலையின் மேல் விமான நிலையம் அமைந்திருக்கும் சுற்றிலும் பள்ளம் காணப்படும்.

இதுபோன்ற ஒரு அமைப்பில் தான் கோழிக்கோடு விமான நிலையம் அமைந்துள்ளது. மலப்புரம் மாவட்டம் கரிப்பூரில் உள்ள ஒரு குன்றின் மேல் இந்த விமான நிலையம் அமைந்துள்ளது.

பொதுவாக விமான நிலையத்தில் விமானங்கள் வேகமாக ஓடி வானில் பறப்பதற்கும், தரையிறங்கவும் நீளமான ஓடுதளம் அவசியமாகும். ஓடுபாதையானது 3,150 மீட்டர் நீளத்துக்கு குறைவாக இருந்தால் அந்த ஓடுபாதையில் விமானத்தை இறக்குவது என்பது கடினமானதாகும். ஆனால், கோழிக்கோடு டேபிள்டாப் விமான நிலையத்தின் ஓடுபாதை 2,850 மீட்டர் தூரம் மட்டுமே.

விமானம் 2 ஆக உடைந்தது ஏன்?

துபாயில் இருந்து கோழிக்கோடு விமான நிலையத்தில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்கிய போது பலத்த மழை பெய்தது.

விமானம் ஓடுதளத்தில் இறங்கிய பின்னர் பாதை சரியாக தெரியாததால் விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம் வேகமாக ஓடுதளபாதையின் முடிவில் உள்ள சுவரில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது.. இதில் விமானத்தின் முன்பகுதி எடை தாங்காமல் இரண்டாக உடைந்து உள்ளது. சமபகுதியாக இருந்திருந்தால் விமானம் இந்த அளவிற்கு சேதம் ஏற்பட்டிருக்காது.

இதில் விமானத்தின் பின்பகுதியில் இருந்தவர்களுக்கு அவ்வளவாக காயம் ஏற்படவில்லை. ஆனால் முன்பக்க கதவு உள்ள பகுதியில் இருந்து விமானியின் அறை வரையில் உள்ள பகுதியில் இருந்தவர்களுக்கு அதிக காயம், பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

பெரிய விமானங்கள்

விமான நிலையம் மலையில் அமைந்து உள்ளதால் பல சர்வதேச விமான நிறுவனங்கள் போயிங் 777 மற்றும் ஏர்பஸ் ஏ330 ஜெட் உள்ளிட்ட பெரிய விமானங்களை கோழிக்கோட்டில் தரையிறங்குவதை நிறுத்திவிட்டன.

ஓடுபாதையில் நீளம் குறித்த பாதுகாப்பு சிக்கல்கள் காரணமாக இந்நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளன. இந்நிலையில் தான் போயிங் 737 விமானம் விபத்துக்குள் சிக்கியிருக்கிறது.

கேரளாவில் உள்ள நான்கு விமான நிலையங்களில் கோழிக்கோடு விமான நிலையம் மிகக் குறுகிய ஓடுபாதையை கொண்டுள்ளது. மேலும், கடந்த காலங்களில் இடைவிடாத மழையில் ஓடுபாதையில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

9 வருடங்களுக்கு முன்பே எச்சரிக்கை

கோழிக்கோடு விமான நிலையம் தரையிறங்குவதற்கு பாதுகாப்பானது அல்ல என்று ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பே ஒரு அறிக்கையில் விரிவாக கூறியுள்ளதாக விமான பாதுகாப்பு நிபுணர் கேப்டன் மோகன் ரங்கநாதன் தெரிவித்திருக்கிறார்.

ஓடுபாதையில் செங்குத்தான சரிவு உள்ளது, பாதுகாப்பு கிடையாது. அவர்களுக்கு ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இது தொடர்பாக எச்சரிக்கை செய்யப்பட்டு ஆதாரம் வழங்கப்பட்டது; ஆனால், விமான நிலையம் தொடர்ந்து செயல்பட்டது; விமான நிலையத்தை பாதுகாப்பானது எனவும் அறிவித்தனர்.

2020 ஆம் ஆண்டில் சில விமான நிலையங்கள் மோசமான நிலையை சந்திக்கும் என தான் யூகித்திருந்தேன். அவற்றில் கோழிக்கோடு விமான நிலையமும் ஒன்றாகும் எனக் குறிப்பிட்டு இருக்கிறார்.

“உயிரிழப்புகள் நேரிட்டால், அது கொலை மற்றும் கிரிமினல் குற்றம்.”

“ஓடுதளப்பாதையின் இருபுறமும் 200 அடி ஆழமான பள்ளத்தாக்குகள் உள்ளன. இது மிகவும் செங்குத்தான சரிவாகும். விமான நிறுவனங்கள் விமானங்களை கண்மூடித்தனமாக இயங்கி வருகின்றன” என்றும் ரங்கநாதன் சாடியிருக்கிறார்.

0 0
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %