அறிமுக இயக்குனர் சதீஷ் சேகர் இயக்கத்தில் தணிகை நடிக்கிறார்.!

Read Time:2 Minute, 43 Second

பல தமிழ் படங்களுக்கு பைனான்ஸ் செய்து வரும் சந்தோஷ் கிருஷ்ணன் முதல் முறையாக, மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமான படத்தை தயாரிக்கிறார்.

பாகுபலி, கபாலி, கத்தி, விவேகம் போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட படங்களுக்கு VFX துறையில் பணியாற்றிய சதீஷ் சேகர் இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயகுனராக அறிமுகம் ஆகிறார்.

தொடுப்பி மற்றும் கருப்பு கண்ணாடி படத்தின் கதாநாயகனாக நடித்த வரும் அருள்நிதியின் டைரி படத்தின் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து கொண்டிருக்கும் தனியார் தொலைக்காட்சி தொகுப்பாளர் தணிகை இப்படத்தின் கதாநாயகனாக நடிக்கிறார்.

மருத்துவமனையில் நடைபெறும் பல அதிர்ச்சிகரமான சம்பவங்களினாள் ஒரு சாமானியன் எந்த அளவிற்கு பாதிக்கப்படுகிறான் என்பதை சுவாரஸ்யமான திருப்பங்களுடன் கிரைம் கலந்த ஆக்க்ஷன் திரில்லர் ஆகவும் அனைத்து தரப்பு மக்களும் தாங்கள் சந்தித்த விஷயங்களை வெளிக்கொணரும் படியாகவும் இந்த படம் உருவாகிறது.

ரான், எழுமின் போன்ற படங்களில் பணியாற்றிய வியன் ராஜா இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

உறியடி படத்தின் கலை இயக்குனராக பணியாற்றிய ஏழுமலை ஆதிகேசவன் இப்படத்திற்கு கலை அமைகிறார்.

ப்ரெண்ட் ஷிப் படத்தின் இசையமைப்பாளரும் சமீபத்தில் வெளியான Rajini anthem பாடலுக்கு இசையமைத்த DM உதயகுமார் இப்படத்திற்கு இசை அமைக்கிறார்.

எழுமின், மை டியர் லிசா, அலேகா படத்தில் பணியாற்றிய கார்த்திக் ராம் இப்படத்தின் எடிட்டர் ஆக பணியாற்றுகிறார்.

கதாநாயகி மற்றும் மற்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர், நடிகை தேர்வு நடைபெற்று வருகிறது.

இப்படத்தின் துவக்க விழா ராஜிவ் காந்தி கல்லூரி தலைவர் Dr. மக்கள் G இராஜன் பங்கேற்க அரசாங்க விதிமுறை படி எளிதாக நடைபெற்றது.

படபிடிப்பு துவங்குவது சம்பந்தமான அறிவிப்பு வந்தவுடன் அதில் குறிப்பிட்டுள்ள வழி காட்டுதலின் படி படபிடிப்பு நடைபெறும் என்றும் படபிடிப்பு துவங்கும் முன் இப்படத்தின் பெயர் வெளியிட முடிவு செய்துள்ளனர்.