கொரோனா தொற்று நோய் வெடித்ததிலிருந்து, நாம் அனைவரும் எந்த வகையான முகக்கவசங்களை நம்ப வேண்டும், எதை தவிர்க்க வேண்டும் என்று யோசித்துக் கொண்டிருக்கிறோம். இப்போது, இறுதியாக இதற்கு பதில் கிடைத்து இருக்கிறது.
கோவிட் -19 தொற்றுநோய் தொடங்கி பல மாதங்களாகிவிட்டதால், தொற்று நோய் மிகவும் கடுமையாக சுவாச மண்டலம், நுரையீரலை பாதிக்கிறது என்பதையும், ஒரு நபர் இருமும்போது, தும்மும்போது அல்லது பேசும்போது கூட சுவாச துளிகளால் மற்றவர்களுக்கு பரவக்கூடும் என்பதையும் நாம் அனைவரும் அறிவோம். இதனுடன் உலகெங்கிலும் உள்ள சுகாதார அமைப்புகளிடமிருந்து நாம் பெற்ற முதல் தகவல்களில் ஒன்று, முகக்கவசங்களை பயன்படுத்துவது கொரோனா வைரஸ் பரவும் அபாயத்தை கணிசமாக குறைக்கும் என்பதாகும்.

இதனையடுத்து சந்தையில் பல்வேறு வகையான முகக்கவசங்கள் நிரப்பப்பட்டு உ ள்ளன. வணிகநோக்கில் இந்த சூழ்நிலையிலிருந்து பயனடைய நிறுவனங்கள் முயற்சிக்கும்போது, உண்மையில் எந்த முகக்கவசம் வேலை செய்கிறது மற்றும் பயனுள்ள முடிவுகளை காட்டுகிறது மற்றும் சந்தைப்படுத்தல் வித்தை என்றால் என்ன என்பதை புரிந்துகொள்வது நம்முடைய பொறுப்பு.
முகக்கவசங்கள் இப்போது நம்முடைய அலமாரிகளிலும், வாழ்விலும் இடம்பிடித்துவிட்டன. இதனால், கொடிய கொரோனா வைரஸ் பரவும் அபாயத்திலிருந்து எந்த வகையான முகக்கவசங்கள் உண்மையில் நம்மைக் காப்பாற்றும் என்பதை அறிந்து கொள்வது அவசியமாகிறது. உண்மையில், ஒரு சமீபத்திய ஆய்வு முகமூடிகளின் செயல்திறனை சோதித்தது, அவை எது சிறப்பாக செயல்படுகின்றன என்பதை தெரிவித்து இருக்கிறது.
டியூக் பல்கலைக்கழக (Duke University) விஞ்ஞானிகள் குழு நடத்திய ஆய்வு முடிவுகள் சயின்ஸ் அட்வான்ஸஸ் (Science Advances) என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் 14 வகையான முகக்கவசங்கள் நோய்தொற்றுக்கு எதிராக சிறந்த பாதுகாப்பை வழங்குகிறது என்பதை தீர்மானித்தது உள்ளது. முகக்கவசம் அணிந்துகொண்டு நோய்த்தொற்றின் பரவலை கட்டுப்படுத்துவது எவ்வளவு எளிமையானது மற்றும் பயனுள்ளது என்பதை அவர்கள் வலியுறுத்தி உள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 40% பேருக்கு தாங்கள் வைரஸை கொண்டு செல்வது தெரியாது. எனவே, வைரஸை பரப்பக்கூடியவர்களாக இருப்பதையும் கருத்தில் கொண்டு, அனைவரும் முகமூடியை அணிந்துகொள்வது அறிகுறியற்றவர்களிடம் இருந்து தொற்று பரவுதலுக்கான வாய்ப்பை குறைக்கிறது.
எந்த வகையான முகக்கவசங்கள் சிறப்பாக செயல்படுகின்றன…? என்ற கேள்விக்கும். நோய் பரவுவதை தடுப்பதற்குப் பயன்படுத்தக்கூடிய மூன்று மிகச் சிறந்த முகக்கவசங்களையும் இந்த ஆய்வு அடையாளம் காட்டுகிறது.
1. என் -95 முகக்கவசம்

இது பெரும்பாலும் சுகாதார வல்லுநர்களால் பயன்படுத்தப்படுகிறது. வழக்கமாக பேசுவதின் போது வெளியேறும் சுவாச துளிகள் பரவுவதை தடுப்பதில் N-95 முகமூடிகள் சிறப்பாக செயல்படும் என்று கூறப்படுகிறது. இந்த முகமூடிகள் காற்றில் உள்ள நோய்க்கிருமிகளை வடிகட்டுவதற்காக சிக்கலான நூல் இழைகளைக் கொண்டிருக்கின்றன. மேலும், அவை முகத்திற்கு மிக நெருக்கமாக பொருந்தும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளன மற்றும் விளிம்புகள் வாய் மற்றும் மூக்கை சுற்றி ஒரு முத்திரையை உருவாக்குகின்றன.
இருப்பினும், நீங்கள் ஒரு சுகாதார பணியாளர் அல்லது அத்தியாவசிய சேவை வழங்குநராக இல்லாவிட்டால் N-95 முகக்கவசத்திற்கு செல்ல வேண்டாம் என்று பரிந்துரைக்கப்படுகிறது. அது மட்டுமல்லாமல் வால்வு பொருத்தப்பட்ட N-95 முகக்கவசங்களி பயன்படுத்துவதற்கு எதிராக அனைத்து மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் சமீபத்தில் மத்திய சுகாதார அமைச்சகம் எச்சரிக்கை விடுத்து உள்ளது. இந்த முகக்கவசங்கள் வைரஸ் பரவுவதை தடுக்காது, மேலும் அதை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு “தீங்கு விளைவிக்கும்” என மத்திய அரசு தெரிவித்தது. எனவே அனைத்து சிக்கல்கள் மற்றும் முரண்பாடுகளுடன், நீங்கள் எளிமையான மற்றும் பயனுள்ள மாற்று முகக்கவசங்களுக்கு செல்லலாம்.
2. அறுவை சிகிச்சை முகக்கவசங்கள்
ஒரு அறுவை சிகிச்சை முகக்கவசம் பொதுவாக மூக்கு மற்றும் வாய் மீது தளர்வாக பொருந்துகிறது மற்றும் இது PPE (தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள்) இன் ஒரு பகுதியாக இருக்கிறது. இந்த முகக்கவசம் பெரிய இருமல் அல்லது தும்மல் துளிகள், ஸ்ப்ளேஷ்கள் அல்லது ஸ்ப்ரேக்களை திறம்பட மறைக்கின்றன. இருப்பினும், அவை சிறிய துளிகளுக்கு ஏற்றதாக இல்லை என தெரிவிக்கப்படுகிறது. இந்த முகக்கவசங்களை நீங்கள் ஒருபோதும் யாருடனும் பகிர்ந்து கொள்ளக்கூடாது என்பதையும், நீண்டகால பயன்பாட்டில் நீங்கள் சுய மாசுபடுவதை தவிர்ப்பதற்காக நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.
3. துணியால் ஆன முகக்கவசம்
இந்த முகக்கவசங்களை பலவிதமான துணிகள் மற்றும் ஆடைகளின் பொருட்களைப் பயன்படுத்தி தயாரிக்கலாம், பெரும்பாலும் இதற்கு இறுக்கமாக நெய்த பருத்தி துணி மிகவும் பொருத்தமானது. பருத்தி, பட்டு, சிஃப்பான், ஃபிளானல் மற்றும் பல்வேறு செயற்கை போன்ற பல்வேறு துணிகளின் கலவையானது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று ஆராய்ச்சி காட்டுகிறது. இந்த முகக்கவசங்களை வீட்டில் வழக்கமான சலவைகளில் (ஒவ்வொரு பயன்பாட்டிற்கும் பிறகு) சுத்தம் செய்யலாம் என சுகாதார அமைச்சகத்தின் ஆலோசனை வலியுறுத்தியுள்ளது. இப்போது உங்களுக்கு எது தேவையானதாக இருக்கும் என்பதை பொறுப்புடன் தேர்வு செய்யுங்கள், தயவுசெய்து முகமூடி இல்லாமல் உங்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம்.