அமெரிக்காவில் அதிபரின் அதிகாரப்பூர்வமான மாளிகைக்கு ரிசின் என்ற கொடிய விஷம் தடவிய கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த கடிதத்தை அமெரிக்க உளவுப்பிரிவு எப்படியே இடையில் தடுத்து நிறுத்திவிட்டது. இந்த கடிதம் கனடாவில் இருந்து அனுப்பப்பட்டுள்ளது என முதல்கட்ட தகவல்கள் தெரிவிப்பதாக அங்கிருந்து வெளிவரும் மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இச்சம்பவம் பற்றி அமெரிக்க உளவுப்பிரிவான எப்பிஐ மிகவும் தீவிரமாக விசாரணையை மேற்கொண்டு வருகிறது.
அமெரிக்காவில் வெள்ளை மாளிகையில் இப்போது அதிபராக டொனால்டு டிரம்ப் உள்ளார்.
வெள்ளை மாளிகைக்கு இதுபோன்று ரிசின் தடவிய கடிதம் வருவது ஒன்றும் புதியது கிடையாது. ஒபாமா காலத்திலும் சரி, டிரம்ப் காலத்திலும் சரி இதுபோன்ற கடிதம் அவ்வப்போது வந்து பூதகரமாகியிருக்கிறது.
அதுயென்ன ரிசின்
ஆமணக்கில் ரிச்சின் இயற்கையாகவே காணப்படுகிறது. ஆனால், அது ஒரு உயிரியல் ஆயுதமாக (கொடிய விஷமாக) மாற்றப்படுகிறது. இதில் சிறிதளவு மனித உடலுக்குள் சென்றாலும் 36 முதல் 72 மணி நேரத்திற்குள் மரணத்தை ஏற்படுத்தும். இதற்கு சிகிச்சையளிக்க எந்தஒரு மறுந்தும் கிடையாது.