பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தின் தலைமை தூதராக ஜெயந்த் கோப்ரகடேவை மத்திய அரசு கடந்த ஜூன் மாதம் நியமனம் செய்தது. அதே மாதம் டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் அதிகாரிகள் எண்ணிக்கையை 50 சதவீதம் குறைக்க இந்தியா உத்தரவிட்டது.
இந்தியாவில் உளவு பார்த்ததற்காக இந்த உத்தரவை மத்திய அரசு பிறப்பித்து இருந்தது.
இப்போது, காஷ்மீர் மற்றும் தூதரக அதிகாரிகள் எண்ணிக்கை விவகாரத்தில் கோபம் அடைந்திருக்கும் பாகிஸ்தான், இந்திய தூதருக்கு விசா வழங்க மறுப்பு தெரிவித்து இருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது.
இந்தியா நியமனம் செய்திருக்கும் ஜெயந்த் கோப்ரகடே மிகவும் மூத்த அதிகாரியென யோசிக்கும் பாகிஸ்தான் அவருக்கு வீசா வழங்க மறுத்திருக்கிறது. ஆனால், யாரை நியமனம் செய்ய வேண்டும் என்று பாகிஸ்தான் கூற முடியாது என இந்திய தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இச்சம்பவம் இருதரப்பு உறவை மேலும் மோசமாக்கும் என பார்க்கப்படுகிறது.