இந்தி திரையுலகை மிரட்டும் போதை மருந்து விவகாரம்…!

Read Time:1 Minute, 58 Second

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணத்தில் போதை மருந்து சம்பந்தப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போதை மருந்து தடுப்புப் பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சுஷாந்தின் காதலி ரியா, ரியாவின் சகோதரர் ஷௌவிக், சுஷாந்தின் மேலாளர் சாமுயல் மிரண்டா, தனிப்பட்ட உதவியாளர் திபேஷ் சாவந்த் உள்ளிட்ட 16 பேரை போதை மருந்து தடுப்புப் பிரிவு போலீஸ் கைது செய்து விசாரித்து வருகிறது. போதை மருந்து தொடர்பாக நடந்த வாட்ஸ் அப் உரையாடல்கள்தான் தொடர் கைது நடவடிக்கைகளுக்கு வித்திட்டது. சமீபத்திலும் மேலும் ஒரு வீடியோ வெளியானது.

இதில் சாரா அலி கான், ரகுல் ப்ரீத் சிங், தீபிகா படுகோன் உள்ளிட்ட நட்சத்திர நடிகைகளின் பெயரும் அடிப்பட்டது.

நடிகை தீபிகா படுகோனின் மேலாளர் கரிஷ்மா பிரகாஷை விசாரித்திருக்கும் போதை மருந்து தடுப்புப் பிரிவு போலீசார் நடிகை தீபிகா படுகோனுக்கும் சம்மன் அனுப்பி உள்ளனர். நடிகைகள் சாரா அலி கான், ஷ்ரத்தா கபூர், ரகுல் ப்ரீத் சிங் ஆகியோருக்கும் அதிகாரிகள் சம்மன் அனுப்பி உள்ளனர். ரகுல் ப்ரீத் சிங் வியாழன் அன்றும், தீபிகா வெள்ளிக்கிழமை அன்றும் மற்ற நடிகைகள் வியாழக்கிழமை அன்றும் விசாரிக்கப்படுவார்கள் என்று தெரிகிறது.

போதைப்பொருள் விவகாரம் தொடர்பான அடுத்தடுத்த விசாரணையில் வேறு நடிகர்கள் யாரெல்லாம் சிக்கவுள்ளார்கள் என்று இந்தி திரையுலகமே மிரண்டிருக்கிறது.