பாகிஸ்தானை போன்று சீனாவிலும் இந்தியாவிற்கு எதிராக பயக்கரவாதிகள்…!

Read Time:1 Minute, 52 Second

இந்தியாவுடன் நேரடியாக மோதும் திறன் இல்லாத பாகிஸ்தான், பயங்கரவாதிகளை கொண்டு மறைமுக தாக்குதலை மேற்கொள்கிறது என்பது அனைவரும் அறிந்த உண்மையாகியிருக்கிறது.

தற்போது, இதேபோன்ற ஒருநிலை சீனாவிலும் காணப்படுகிறது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது. உல்பா (இன்டிபென்டன்ட்) என்ற பயங்கரவாத அமைப்பு வடகிழக்கு மாநிலங்களில் பல்வேறு நாசவேலைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த பயங்கரவாத அமைப்பு முதல்கட்டமாக மியான்மரில் இருந்து செயல்பட்டது. கடந்த் 2019-ம் ஆண்டு இந்திய அரசின் கோரிக்கையை ஏற்று மியான்மர் ராணுவம், இந்த பயங்கரவாத இயக்க முகாம்களை அழித்தது.

இதனைத் தொடர்ந்து பயங்கரவாத அமைப்பு சீனாவுக்கு இடம்பெயர்ந்து இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக டெல்லியில் செயல்படும் சட்டவிரோத தடுப்பு தீர்ப்பாயத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் அபிடவிட் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

அதில் “உல்பா பயங்கரவாத அமைப்பு சீனாவின் யுனான் மாகாணம், ரூய்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. அங்கிருந்து கொண்டு இந்தியாவுக்கு எதிரான நாசவேலைகளில் ஈடுபடுகிறது. சீனாவில் இருக்கும் முகாமில் பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் செயல்படும் பல்வேறு பயங்கரவாத குழுக்களுக்கு சீன அரசு ஆதரவு அளித்து வருகிறது.