டிரம்ப் டிஸ்சார்ஜ்… எந்த மருந்துகளால் சிகிச்சை அளிக்கப்பட்டது…? விபரம்

Read Time:2 Minute, 28 Second

கொரோனா நெருக்கடிக்கு மத்தியிலும் அங்கு வருகிற நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்க இருக்கிறது.

இதற்காக டிரம்ப் நாடு முழுவதும் பல்வேறு மாகாணங்களுக்கு சென்று சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், அவருக்கும் அவரது மனைவி மெலனியாவுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து கடந்த சனிக்கிழமை வால்டர் ரீட் தேசிய ராணுவ ஆஸ்பத்திரியில் டிரம்ப் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் இன்று அதிகாலையில், மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

அவருக்கு முழுமையாக குணமாகிவிட்டதா என்றால் கிடையாது. டிரம்ப் அபாய கட்டத்தை கடக்கவில்லை. இருப்பினும், அவருடைய சுவாச திறன் நலமாக இருக்கிறது. வெள்ளை மாளிகையிலும் அவர் மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவ குழு தெரிவித்துள்ளது. இதற்கிடையே பிரசாரம் மீது தீவிரம் காட்டும் டிரம்ப், அதனை தொடரப்போவதாக கூறியிருக்கிறார்.

டிரம்புக்கு அவரது ஆற்றலை அதிகரிக்கும் மருத்துவம், ஸ்டெராய்ட் மருந்தான டெக்ஸாமெதாசோன், ரெம்டெசிவைர், பிறகு ஆண்ட்டிபாடிக்கல் ஆகியவையாகும்.

கொரோனா வைரஸ் கண்டு யாரும் அஞ்ச வேண்டாம் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகைக்கு திரும்பியதும் மீண்டும் தன்னுடையை வேலையை தொடங்கிவிட்டார். அமெரிக்காவில் வைரஸ் 2 லட்சத்து 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரை குடித்திருக்கும் நிலையில், டிரம்ப் மீண்டும் மாஸ்க் அணியாமல் வலம் வருவது விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %