எல்லையில் படைகளை வலிமையாக நிலைநிறுத்தி உள்ளோம் – இந்திய விமானப்படை தளபதி

Read Time:2 Minute, 17 Second
Page Visited: 104
எல்லையில் படைகளை வலிமையாக நிலைநிறுத்தி உள்ளோம் – இந்திய விமானப்படை தளபதி

கிழக்கு லடாக்கில் கடந்த மே மாதம் சீன ராணுவம், இந்திய எல்லைக்குள் அத்துமீற துணிந்தது.

இதனையடுத்து எல்லையில் 5 மாதங்களாக பதற்றம் நிலவி வருகிறது. பதற்றத்தை தணிக்க இரு நாடுகளுக்கும் இடையே ராணுவ ரீதியிலான, ராஜ்யரீதியிலான பேச்சுவார்த்தைகள் நடந்து வந்தாலும், பெரிய அளவில் முன்னேற்றம் காணப்படவில்லை. லடாக் எல்லை பகுதியில் இந்திய விமானப்படையில் புதியதாக சேர்க்கப்பட்டுள்ள ரபேல் போர் விமானங்கள் ரோந்து சுற்றி வருகின்றன.

இந்த நிலையில், இந்திய விமானப்படை தினம், வருகிற 8-ம் தேதி கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி, இந்திய விமானப்படை தளபதி ஆர்.கே.எஸ்.பதாரியா செய்தியாளர்களிடம் பேஎசினார். அவர் பேசுகையில், இந்திய விமானப்படையின் திறமைக்கு சீன விமானப்படை ஈடு ஆகாது. இருந்தாலும், எதிரியை குறைத்து மதிப்பிடும் கேள்விக்கே இடம் கிடையாது. எனவே, லடாக் பகுதியில் பொருத்தமான எல்லா இடங்களிலும் படைகளை வலிமையாக நிலைநிறுத்தி உள்ளோம். எந்தஒரு அச்சுறுத்தலையும் சமாளிக்க விமானப்படை தயார்நிலையில் இருக்கிறது.

ரபேல் போர் விமானங்களை விமானப்படையில் சேர்த்த பின்னர், நமது படையின் பலம் அதிகரித்து உள்ளது. எல்லையில் நாம் ஒரு படி விஞ்சி நிற்பதற்கு உதவியாக அமைந்து இருக்கிறது. வடக்கு எல்லையிலும் (லடாக்), மேற்கு எல்லையிலும் (பாகிஸ்தான்) ஒரே நேரத்தில் இருமுனை போர் மூளும் சூழ்நிலை வந்தாலும்சரி, அதை எதிர்கொள்ள விமானப்படை தயாராக உள்ளது எனத் கூறியிருக்கிறார்.

0 0
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %