செவ்வாய் கிரகம் இன்று பூமிக்கு அருகில் வருகிறது… வருட இறுதியில் அரிய நிகழ்வு…!

Read Time:3 Minute, 6 Second
Page Visited: 157
செவ்வாய் கிரகம் இன்று பூமிக்கு அருகில் வருகிறது… வருட இறுதியில் அரிய நிகழ்வு…!

செவ்வாய் கிரகம், சூரியனை சுற்றி வரும் தனது பயணத்தின்போது, அதன் வட்டப்பாதையில் பூமிக்கு மிக நெருக்கமான இடத்தை அடைகிறது. பூமிக்கும், செவ்வாய் கிரகத்துக்கும் இடையிலான அதிகபட்ச தூரம் 40 கோடியே 13 லட்சம் கி.மீ.. இதில், இன்று பூமிக்கு மிக அருகில் செவ்வாய் கிரகம் வரும்போது, இரண்டுக்கும் இடையிலான தூரம் 6 கோடியே 20 லட்சம் கி.மீ. ஆக குறையும்.

இந்திய நேரப்படி இன்று இரவு 7.47 மணிக்கு இந்த அரிய வானியல் நிகழ்வு ஏற்பட உள்ளது. அதன்பிறகு, இன்னும் 13 ஆண்டுகள் கழித்துத்தான் இந்த நிகழ்வு ஏற்படும்.

இதுகுறித்து இந்திய கோள்கள் சமூகத்தின் இயக்குனர் ஸ்ரீரகுநந்தன் குமார் கூறுகையில், வருகிற 14- ம் தேதி பிற்பகல் 2.56 மணிக்கு செவ்வாய் கிரகமும், சூரியனும் ஒன்றுக்கொன்று எதிர்எதிரே காணப்படும். நாம் பூமியில் இருந்து பார்க்கும்போது, செவ்வாயும், சூரியனும் ஒரே நேர்கோட்டில் தெரியும். எந்த கிரகமும் சூரியனுக்கு நேர் எதிரில் வரும்போது, பூமிக்கு மிக நெருக்கமான இடத்தை அடைவது இயல்பானது. அந்த வகையில், நாம் தொலைநோக்கி மூலம் பார்க்கும்போது, செவ்வாய் கிரகம் பெரிதாகவும், பிரகாசமாகவும், நெருக்கமாகவும் தெரியும்.

இந்த ஆண்டு இறுதிவரையில் வானில் செவ்வாய் கிரகத்தை காணலாம். மிகவும் பிரகாசமாக பார்க்க வேண்டுமானால், இம்மாத இறுதிவரையில் காணலாம். ஏனென்றால், நாட்கள் ஆக ஆக தூரம் அதிகரிப்பதால், பிரகாசமும், அளவும் குறைந்துவிடும். பொதுமக்கள் சூரிய அஸ்தமனத்துக்கு பின்னர் வெறும் கண்ணால் செவ்வாய் கிரகத்தை பார்க்கலாம். சூரியன் மேற்கில் மறைந்தவுடன் கிழக்கு மற்றும் தென்கிழக்கு திசைக்கு இடையே அரை மணி நேரங்கள் பார்க்கலாம். பல வாரங்களுக்கு இப்படி பார்க்கும் வாய்ப்பு கிட்டும்.

நள்ளிரவு நேரமாக இருந்தால், நமது தலைக்கு மேலே காணலாம். காலை நேரத்தில், மேற்கு மற்றும் தென்மேற்கு திசையில் பார்க்கலாம். வெறும் கண்ணால் பார்க்கும்போது, ஆரஞ்சு நிறத்தில் பிரகாசமாக தெரியும் எனக் கூறியிருக்கிறார்.

0 0
Happy
Happy
100 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %