தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 5 மாவட்டங்களில் இடம்பெறும் சட்டமன்ற தொகுதிகள் விபரம்…

Read Time:4 Minute, 0 Second
Page Visited: 147
தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 5 மாவட்டங்களில் இடம்பெறும் சட்டமன்ற தொகுதிகள் விபரம்…

தமிழகத்தில் புதிதாக பிரித்து உருவாக்கப்பட்ட 5 மாவட்டங்களில் இடம்பெறும் சட்டமன்ற தொகுதிகள் பற்றிய அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டு உள்ளது.

தமிழகத்தில் காஞ்சீபுரம் மாவட்டம், காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டது. வேலூர் மாவட்டம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் என மூன்று மாவட்டங்களாக பிரிந்தது. விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களாகவும், நெல்லை மாவட்டம், நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களாக பிரிக்கப்பட்டன. 5 மாவட்டங்கள் புதிதாக உருவாகியுள்ளன.

இந்த 5 புதிய மாவட்டங்களுக்கான வாக்காளர் பட்டியலை தனியாக உருவாக்கும் வகையில், அந்த மாவட்ட கலெக்டர்களை மாவட்ட தேர்தல் அதிகாரியாக அங்கீகரித்து சமீபத்தில் இந்திய தேர்தல் ஆணையம் ஆணை பிறப்பித்து உள்ளது. இந்த நிலையில் 4 மாவட்டங்கள் மற்றும் அதிலிருந்து பிரிக்கப்பட்ட 5 புதிய மாவட்டங்கள் ஆகியவற்றுக்கான சட்டமன்ற தொகுதிகளை ஒதுக்கி இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அதன் விவரம்:-

காஞ்சீபுரம்

தற்போதுள்ள காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஆலந்தூர், ஸ்ரீபெரும்புதூர் (தனி), உத்திரமேரூர், காஞ்சீபுரம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகள் அடங்குகின்றன.

செங்கல்பட்டு மாவட்டத்திற்குள், சோழிங்கநல்லூர், பல்லாவரம், தாம்பரம், செங்கல்பட்டு, திருப்போரூர், செய்யூர் (தனி), மதுராந்தகம் (தனி) ஆகிய 7 சட்டமன்ற தொகுதிகள் இடம்பெறுகின்றன.

வேலூர்

வேலூர் மாவட்டத்தில் காட்பாடி, வேலூர், அணைக்கட்டு, கே.வி.குப்பம் (தனி), குடியாத்தம் (தனி) ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகள் இடம்பெறுகின்றன.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணம் (தனி), சோளிங்கர், ராணிப்பேட்டை, ஆற்காடு ஆகிய 4 தொகுதிகள் இடம்பெறுகிறது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் வாணியம்பாடி, ஆம்பூர், ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 4 தொகுதிகளும் அடங்குகின்றன.

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சி, மைலம், திண்டிவனம் (தனி), வானூர் (தனி), விழுப்புரம், விக்கிரவாண்டி, திருக்கோவிலூர் ஆகிய 7 சட்டமன்ற தொகுதிகள் வருகிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உளுந்தூர்பேட்டை, ரிஷிவந்தியம், சங்கரா புரம், கள்ளக்குறிச்சி (தனி) ஆகிய 4 தொகுதிகள் வருகின்றன.

நெல்லை

நெல்லை மாவட்டத்தில் திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், பாளையங்கோட்டை, நாங்குநேரி, ராதாபுரம் ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகள் இடம்பெறுகிறது.

தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவில் (தனி), வாசுதேவநல்லூர் (தனி), கடையநல்லூர், தென்காசி, ஆலங்குளம் ஆகிய 5 தொகுதிகளும் அடங்குகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 0
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %