அமெரிக்க தேர்தல் 2020: வெல்லப்போவது யார்…? ஒருவர் வெற்றி பெறுவது எப்படி…?

Read Time:7 Minute, 31 Second

பள்ளியில் படிக்கும் நாட்களில் இருகட்சி ஆட்சி முறை இருக்கும் நாடுகள் எவை…? என்ற கேள்வியை பார்க்கும் போது அமெரிக்கா எளிதாகவே நினைக்கு வந்துவிடும். ஆனால், அங்கிருக்கும் அரசியல் நடைமுறையை புரிந்துக்கொள்வது அவ்வளவு சுலபமான காரியம் கிடையாது என்றுதான் சொல்ல வேண்டும். அந்தளவிற்கு இடியாப்ப சிக்கலில் மாகாண மற்றும் மத்திய அரசுகளுக்கு இடையே உள்விவகார நடவடிக்கைகள் காணப்படுகிறது.

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். பொதுத்தேர்வில் மக்கள் நேரடியாகவே தங்களுடைய எம்.பி.க்களை தேர்வு செய்வார்கள். பெரும்பாலான எம்.பி.க்கள் ஆதரவை கொண்ட கட்சி, அல்லது கூட்டணி கட்சிகள் ஆட்சியில் அமரும் இது நாம் அறிந்த ஒன்று.

ஆனால், ஜனநாயக நாடு என்று சொல்லிக்கொண்டாலும் அமெரிக்காவில் மக்கள் தேர்தலில் வாக்களிப்பதுடன் பொறுப்பு நின்றுவிடுகிறது. நேரடியாக அதிபரை தேர்வு செய்வது கிடையாது.

பிற எப்படி அங்கு தேர்தலில் அதிபர் தேர்வு செய்யப்படுகிறார் என்பதை இப்போது பார்க்கலாம்…

அமெரிக்காவில் ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நவம்பர் மாதம் முதல் செவ்வாய்க்கிழமை தேர்தல் நடத்தப்படும் என்பது மாற்றம் இல்லாதது மற்றும் நிலையானது.

தேர்வு செய்வோர் அவை

இந்நாளில் அமெரிக்க மக்கள் அதிபர் வேட்பாளர்களுக்கு (தற்போதையை வேட்பாளர்கள் டொனால்டு டிரம்ப், ஜோபைடன்) நேரடியாக வாக்களிக்க மாட்டார்கள். மாறாக அமெரிக்க அரசியலமைப்பால் நிறுவப்பட்ட தேர்வு செய்வோர் அவை" Electoral College உறுப்பினர்களை தேர்வு செய்கிறார்கள். ஒவ்வொரு மாகாணங்களும் அங்கிருக்கும் மக்கள் தொகையின் அடிப்படையில்தேர்வு செய்வோர் அவை”யின் பிரதிநிதிகளின் எண்ணிக்கை அமைகிறது.

உதாரணமாக, அமெரிக்காவில் மிக அதிகமான மக்கள் தொகையை கொண்ட கலிபோர்னியாவில் இந்த அவையில் 55 பிரதிநிதிகள் இருக்கின்றனர். மிகச் சிறிய மாகாணமான வெர்மாண்ட் மாகாணத்தில் 3 உறுப்பினர்கள்தான் உள்ளனர். இந்த “தேர்வு செய்வோர் அவை”யானது அமெரிக்க அதிபரை தேர்ந்தெடுக்கும் ஒரே நோக்கத்துக்காக 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை உருவாகிறது .

அமெரிக்காவில் இவ்வாறு தேர்வு செய்வோர் அவை பிரதிநிதிகள் மூலம் அதிபரை தேர்வு செய்யும் நடைமுறை 200 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. அமெரிக்கா ஜனநாயக அமைப்பையே கொண்டிருக்க வேண்டும் என்று நினைத்தவர்கள், மக்களால் அதிபர் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படும்போது தகுதியற்ற யாரேனும் ஒருவர் அதிபராகி விடுவாரோ என்று கவலையடைந்து இந்நடைமுறையை கொண்டுவந்திருக்கின்றனர்.

270 உறுப்பினர்களின் ஆதரவு

அமெரிக்காவில் மொத்தமாக தேர்வு செய்வோர் அவை”யில் தற்போது 538 பே உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இதில், குறைந்தது 270 உறுப்பினர்களின் ஆதரவை கொண்ட வேட்பாளர்தான் தேர்தலில் வெற்றிபெற்று அதிபராக முடியும். எனவே, அங்கு தேர்தல் பிரசாரமானது பெரும்பாலும் இந்த 270தேர்வு செய்வோர் அவை” பிரதிநிதிகள் வாக்குகளை பெறுவதையே இலக்காக கொண்டிருக்கிறது.

பெரும்பாலான மாகாணங்களில், எந்த வேட்பாளருக்கு அதிகமான வாக்குகள் கிடைக்கிறதோ, அவருக்குதான் அந்த மாகாணத்தின் தேர்வு செய்வோர் அவை உறுப்பினர்களின் ஆதரவும் கிடைக்கும். உதாரணமாக கலிபோர்னியா மாகாணத்தை எடுத்து கொண்டால், அங்கு வெற்றி பெரும் வாக்காளருக்கு 99% வாக்குகள் கிடைத்தாலும் சரி, வெறும் 51% வாக்குகள் கிடைத்தாலும் சரி, அந்த மாகாணத்துக்கான மொத்த “தேர்வு செய்வோர் அவை” பிரதிநிதிகளின் 55 வாக்குகளும் வெற்றியாளருக்கே போய் சேர்ந்துவிடும்.

மாற்றம் கொண்டுவரக் கோரிக்கை

எனவேதான் மக்களின் குறைந்த வாக்குகளை பெற்ற வேட்பாளரால் கூட, அதிபராக முடிகிறது. ஏனெனில் அவரிடம் “தேர்வு செய்வோர் அவை” பிரதிநிதிகளின் வாக்குகள் பெரும்பான்மையாக இருக்கும். கடந்த 2016 தேர்தலில் அதிபர் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றது இப்படித்தான். 2000-ம் ஆண்டு குடியரசு கட்சி வேட்பாளர் ஜார்ஜ் புஷ்ஷும் மக்களின் வாக்குகள் குறைவாக பெற்று, தேர்வு செய்வோர் அவை பிரதிநிதிகள் வாக்குகளால்தான் வெற்றி பெற்று அதிபரானார். அதற்கு முன்னதாக கடந்த 100 ஆண்டுகளில் இதுபோன்ற நிலை அமெரிக்காவில் ஏற்பட்டது கிடையாது.

2016 தேர்தலில் ஹிலாரி கிளின்டன், டிரம்ப்பை விட 2.1% அதிக வாக்குகளை பெற்றும் தோல்வியடைந்தார். டிரம்ப் 304 தேர்வு செய்வோர் அவை வாக்குகளையும், ஹிலாரி கிளின்டன் 227 தேர்வு செய்வோர் அவை வாக்குகளையும் பெற்றிந்தனர் (2016-ல் 7 உறுப்பினர்கள் மாறி வாக்களித்தனர்). இந்த “தேர்வு செய்வோர் அவை”யில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கை அங்கு தொடர்ந்து எழுந்துவருகிறது.

இதற்காக பல ஆண்டுகளாக முயற்சிகள் எடுக்கப்பட்டு வந்தாலும், அமெரிக்காவை போன்ற மிகப்பெரிய ஜனநாயக நாட்டில், சிறந்த தேர்தல் முடிவுகளை பெற இதுவே சரியான வழி என்று இதன் ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

பதவி ஏற்பு

அமெரிக்க அரசியல் அமைப்பு சட்டப்படி ஜனவரி 20-ம் தேதி அமெரிக்க அதிபருக்கான பதவியேற்பு நாளாகும். தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் வாஷிங்டன் டி.சி.யில் உள்ள கேபிடல் கட்டடத்தின் படிகளில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் புதிய அதிபர் அதிகாரபூர்வமாக பதவியேற்கிறார். புதியதாக வேறு அதிபர் வருகிறார் என்றால் புதிய அமைச்சர்களை நியமனம் செய்யவும், திட்டம் தீட்டவும், அவருக்கு சிறிது காலம் வழங்கப்படும்.

பதவியேற்பு விழாவுக்குப் பிறகு, புதிய அதிபர் வெள்ளை மாளிகையில் தனது நான்கு ஆண்டுகாலப் பதவியை தொடங்குகிறார்.