இன்று கடைகளை ஆக்கிரமித்திற்கும் பேப்பர் கப்புகளை மக்கள் டீ மற்றும் காபி குடிக்க பயன்படுத்துகின்றனர். பிளாஸ்டிக் கப்களால் தீங்கு நேரிடுகிறது என்ற விழிப்புணர்வு அதிகமாக பரவியதும் பேப்பர் கப்புகள் படையெடுக்க தொடங்கிவிட்டன. ஆனால், இதுவும் பாதுகாப்பானதா என்ற கேள்விக்கு ஐஐடி கரக்பூர் ஆய்வை பதிலாக வழங்கியிருக்கிறது.
பேப்பர் கப்புகளில் சூடாக வழங்கப்படும் டீ மற்றும் காபி பானங்களில் கண்ணுக்கு தெரியாத பிளாஸ்டிக் கலந்து மனித உடலுக்குள் செல்வது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடைகளில் கண்ணாடி கிளாஸ் சுகாதாரமானது இல்லை என்ற காரணத்தினால் தேர்வு செய்யப்படும் பேப்பர் கப்புகளும் உடல் உபாதைகளை ஏற்படுத்த வல்லது என்பது போன்று ஆய்வு முடிகள் வெளியாகியிருக்கிறது. ஐஐடி கரக்பூரை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் ஒருமுறை பயன்படுத்திவிட்டு தூக்கி வீசப்படும் இந்த பேப்பர் கப்பில் குடிக்கும் சூடான பானங்களில் நுண்ணிய பிளாஸ்டிக் மற்றும் மாசு இருப்பதை உறுதிசெய்துள்ளனர்.
பேப்பர் கப்புகளில் உறுதித்தன்மைக்காக உட்புறங்களில் மெழுகு போன்ற நுண்ணிய படலம் காணப்படும். இந்த உள்பூச்சு ஹைட்ரோபோபிப்பிலிம் என்று அழைக்கப்படுகிறது. இது பெரும்பாலும் பிளாஸ்டிக்கை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்படுகிறது. அதாவது பாலி எத்திலின், பாலிமர் போன்ற ரசாயனங்களால் தயாரிக்கப்படுகிறது.

இந்த கப்புகளில் சூடான பானங்களை ஊற்றும் போதும் அதிலிருக்கும் பிளாஸ்டிக் துகள்கள் கலந்துவிடுகின்றன என்பதுதான் ஆய்வாளர்களின் பதிலாக உள்ளது.
80 முதல் 90 டிகிரி செல்ஸியல் சூட்டில் பேப்பர் கப்புகளில் வழங்கப்படும் 100 எம்.எல். சூடான பானத்தில் 25000 மைக்ரோசைஸ் அளவுள்ள மைக்ரோ பிளாஸ்டிக்குகள் கலப்பதாக தெரிவித்துள்ளனர். ஒருவர் ஒருநாளைக்கு 3 முறை இந்த கப்புகளில் சூடான தேநீர் அல்லது காபியை குடிக்கும் போது அவருடைய உடலுக்குள் கண்ணுக்கு தெரியாத சுமார் சுமார் 75,000 நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள் செல்லாம் எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.
மேலும், இவை உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய உலோகங்களையும் கடத்துகிறது என எச்சரித்துள்ளனர்.