மெகா கூட்டணியை கவிழ்த்துவிட்ட காங்கிரஸ்… மம்தா பாணியை கையில் எடுக்குமா பிராந்திய கட்சிகள்…!

Read Time:2 Minute, 56 Second
Page Visited: 281
மெகா கூட்டணியை கவிழ்த்துவிட்ட காங்கிரஸ்… மம்தா பாணியை கையில் எடுக்குமா பிராந்திய கட்சிகள்…!

பீகார் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பாஜக – ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி இடையே கடும் போட்டி நிலவியது.

மொத்தம் 243 தொகுதிகளைக் கொண்ட பீகார் சட்டப்பேரவை தேர்தல் இறுதியில் ஆட்சியமைக்க தேவையான 122 இடங்களை தாண்டி 125 இடங்களை பிடித்து ஆட்சியை தக்க வைத்துக்கொண்டது. இக்கூட்டணிக்கு அதிகமாக 3 எம்.எல்.ஏக்கள் மட்டுமே உள்ளது.

சுமார் 70-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாஜக கூட்டணி வேட்பாளர்களுக்கும் மெகா கூட்டணி வேட்பாளர்களுக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் 500 முதல் 1000 வரை மட்டுமே இருந்தது.

தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் நொடிக்கு நொடி மாற்றம் ஏற்பட்டது. பாஜக கூட்டணிக்கும், மெகா கூட்டணிக்கும் இடையே கடுமையான போட்டி காணப்பட்டது. மெகா கூட்டணி 110 இடங்களை தனதாக்கியது. அக்கூட்டணியில் லாலுவின் ராஷ்டீரிய ஜனதா தளம் 75 இடங்களை பிடித்து தனிப்பெரும் கட்சியானது.

முடிவுகள் வெளியானதும் மெகா கூட்டணியை கவிழ்த்துவிட்டது காங்கிரஸ் கட்சிதான் என்ற விமர்சனம் எழுந்து உள்ளது. காங்கிரஸ் கட்சியின் எம்.பி. ராகுல் காந்தி வெறும் இரண்டு பிரசாரக் கூட்டங்களில் மட்டுமே கலந்துக் கொண்டார். அக்கட்சியினர் இடையே கோஷ்டி பூசல் மட்டுமே விஸ்தரித்துள்ளது என குற்றம் சாட்டப்படுகிறது.

மெகா கூட்டணியில் சுமார் 70 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் வெறும் 19 தொகுதிகளில் மட்டுமே வென்றுள்ளது.

அதே கூட்டணியில் இடம்பெற்ற இடதுசாரிகள் தாங்கள் போட்டியிட்ட 29 தொகுதிகளில் 16 தொகுதிகளை வசப்படுத்தினர். காங்கிரஸ் போட்டியிட்ட தொகுதிகளில் பெறும்பாலும் பாஜக வெற்றி வாகையை சூடியிருக்கிறது…

காங்கிரசை மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி கூட்டணியில் சேர்ப்பதே கிடையாது. இனிவரும் காலங்களில் காங்கிரஸை இதே பாணியில் விலக்கிவிடவே பிராந்தியக் கட்சிகள் பார்க்கும் என்பது அரசியல் நோக்கர்களின் பார்வையாக உள்ளது.

0 0
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %