நிவர் புயல் கடைசி நேரத்தில் அதி தீவிரப் புயலாக வேகம் கூடியது ஏன்…?

Read Time:4 Minute, 49 Second

நிவர் புயல் தமிழகத்தில் கரையை கடந்து செல்லும் பகுதியில் மழையை கொட்டி செல்கிறது. அதிதீவிரப் புயலாக மறிய நிவர் 130 வேகத்தில் கரையை கடந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

2018-ம் ஆண்டு கஜா புயல் தாக்கிய பின்னர் தமிழகம் மீண்டும் ஒரு புயலை எதிர்க்கொண்டிருக்கிறது. வங்க கடலில் உருவான நிவர் புயல் கடைசி நேரத்தில் தீவிரப்புயலில் இருந்து அதி தீவிரப்புயலாக மாறியது. கடல் பகுதியில் உருவாகும் ஒரு புயலின் நகர்வானது காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயல் என நீண்ட செயல்முறையை கொண்டிருக்கிறது.

வானிலை விஞ்ஞானிகள் பொதுவாக இத்தகைய புயல்களின் பாதையையும் மற்றும் தீவிரத்தை நாட்களுக்கு முன்பே கணிக்கின்றனர். இருப்பினும் இயற்கையை அவ்வளவு துல்லியமாக கணித்துவிட முடியாது என்ற வகையில் பாதையும், புயலின் வேகமும் மாறும் சம்பங்களும் நிகழ்ந்துதான் வருகிறது..

நிவர் புயல் விவகாரத்தில் நவம்பர் 24 வரையில் காற்றின் வேகம் 75 கி.மீட்டராக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) கணித்திருந்தது. ஆனால், நவம்பர் 24 மாலையே ஐஎம்டி புயலானது தீவிரத்திலிருந்து அதி தீவிரப்புயலாகி உள்ளது எனக் அறிவித்தது. மேலும், அடுத்த 24 மணி நேரத்தில் காற்று 120 கிமீ வேகத்தில் வீசக்கூடும் என்றும் கூறியது.

இதில் எளிமையாக சொல்லப்போனால் சுமார் 24 மணி நேரத்தில் புயல் காற்றின் வேகம் 50-55 கிமீ அளவில் மாறுப்பட்டுள்ளது. காலநிலை அடிப்படையில் பார்த்தால் இது விரைவாக தீவிரத்தன்மையை எட்டியிருக்கிறது. மேலும், புயல் முன்னர் எதிர்பார்த்ததை விடவும் மிகவும் அதிகமான சீர்குலைப்பை ஏற்படுத்தும் என்ற எச்சரிக்கையையும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

இந்திய வானிலை ஆய்வு மைய தகவலின்படி கடல்-மேற்பரப்பில் வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸ் வரையில் இருந்தது. இந்த வெப்பநிலை மாற்றமானது இப்பகுதியில் காற்றை செங்குத்தாக எழ வழிவகுத்து உள்ளது. நவம்பர் 2017-ல் கிழக்கு கடற்கரையை தாக்கிய ஓக்கி புயலின்போதும் இதேபோன்ற முறையே காணப்பட்டது. சாதாரண வெப்பத்தைவிட கடல் மேற்பரப்பில் வெப்பம் அதிகரிப்பது சூறாவளிகள் உருவாவதற்கு ஒரு நாற்றாங்காலாக மாறுகிறது. நிவர் புயலின்போது வங்காள விரிகுடாவில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை இயல்பை விட 0.5 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

ஒக்கி புயல் உருவாகத்தின் போது சுமார் ஒன்பது மணி நேரத்திற்குள் ஒரு காற்றழுத்த தாழ்வானது சுமார் புயலாக மறியது. மேலும் அடுத்த 24 மணி நேரத்தில் இது ஒரு அதி தீவிர புயலாக உருவானது. அதிர்ஷ்டவசமாக நிவர் புயலை பொறுத்தமட்டில் புதுச்சேரி அருகே கரையை கடந்த பின்னர் பலவீனமடைந்து என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

புயல் இப்போது நிலப்பகுதிக்குள் இருப்பதால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மழை தொடர வாய்ப்புள்ளது. வியாழக்கிழமை மாலைக்குள் நிவர் மேலும் பலவீனமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிவருடனான ஒரு குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், அது கடற்கரையை கடக்கத் தொடங்கியதும் மழை சிறிது நேரம் நின்றது. ஆனால் சென்னையில் வீரிய காற்றுடன் திரும்பியுள்ளது.

இந்த ஆண்டு மே மாதம் கிழக்கு கடற்கரை பகுதியில் உருவான “சூப்பர் புயலான” ஆம்பான் தாக்கியதில் இந்தியா மற்றும் பங்களாதேஷில் 110 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். இந்த புயலினால் கொல்கத்தா மோசமாக பாதிக்கப்பட்டது. ஆம்பான் புயலுக்கு அடுத்தப்படியாக கிழக்கு கடற்கரையில் புயல் நிவர் தாக்கியுள்ளது.