கமல்ஹாசனுக்கு ரூ.177 கோடி சொத்து!

Read Time:1 Minute, 14 Second

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

அதில் அவர் தனது சொத்து மதிப்பு தொடர்பான விவரங்களையும் பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டு உள்ளார்.

அதன்படி தனக்கு அசையா சொத்துகள் ரூ.131 கோடியே 84 லட்சத்து 45 ஆயிரம், அசையும் சொத்துகள் ரூ.45 கோடியே 9 லட்சத்து ஆயிரத்து 476 என மொத்தம் ரூ.176 கோடியே 93 லட்சத்து 46 ஆயிரத்து 476 ரூபாய் உள்ளது எனக் குறிப்பிட்டு இருக்கிறார்.

மேலும் தனக்கு கடன் ரூ.49 கோடியே 50 லட்சத்து 11 ஆயிரத்து 10 உள்ளதாகவும், கடந்த ஆண்டு வருவாய் ரூ.22 கோடி என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

இதேபோல் கோவை சிங்காநல்லூர் தொகுதி வேட்பாளர் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில துணைத்தலைவர் டாக்டர் மகேந்திரனுக்கு மொத்தம் ரூ.160 கோடிக்கு பல்வேறு சொத்துகள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.