வீடியோ… காஷ்மீரில் உலகின் உயரமான ரெயில்வே பாலம்…! இறுதிகட்ட பணிகள்

Read Time:2 Minute, 5 Second

ஜம்மு காஷ்மீரில் செனாப் ஆற்றின் மேல் உலகின் மிக உயரமான ரெயில்வே பாலம் அமைக்கப்படுகிறது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரியாசி மாவட்டத்தில் செனாப் ஆறு உள்ளது. 1315 மீட்டர் நீளம் கொண்ட பாலத்தில் 476 மீட்டர் ஆற்றின் மீது கட்டப்பட்டு வருகிறது.

பாலத்தின் அதிகபட்ச உயரம் கடல் மட்ட அளவிலிருந்து 359 மீட்டராக உள்ளது.

குதுப்பினாரைவிட ஐந்து மடங்கு உயரத்தில் இந்த பாலம் கட்டப்படுகிறது.

இதன்மூலம் இந்த ரெயில்வே பாலத்துக்கு உலகின் மிக உயரமான கட்டுமானம் என்ற பெருமை கிடைத்துள்ளது.

இதன் மூலம் பாராமுல்லா, ஸ்ரீநகர் ஆகிய பகுதிகள் ஜம்முவுடன் இணைக்கப்படும்.

இந்த பாலம் வழியாக ஸ்ரீநகரிலிருந்து ஜம்முவுக்கு 7 மணி நேரத்தில் பயணம் செய்யலாம்.

ரூ.1,250 கோடி மதிப்பிலான இந்தப் பாலம் 266 கிமீ வேகத்தை தாங்கக் கூடியது என்றும் இதன் ஆயுட்காலம் 120 ஆண்டுகள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பாலத்தின் கட்டுமானப் பணி இறுதிக்கட்டத்தில் உள்ளது.

பாலத்தின் கட்டுமான வீடியோவை ரெயில்வே அமைச்சகம் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளது.

உலகின் மிகப்பெரிய கட்டுமானமாக உருவாகும் இப்பாலம் மிக முக்கிய வரலாற்று நிகழ்வாக இருக்கிறது என ரெயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

இந்த பாலம் 2021 டிசம்பரில் முழுவதுமாக முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வரவிருக்கிறது.

காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்க இந்த ரெயில்வே பாலம் பயன்படும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.