கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் வேட்பு மனு தாக்கல் செய்ய நாகர்கோவில் கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு வந்தார் அவருடன் நாகர்கோவில் தொகுதி தி.மு.க. வேட்பாளர் சுரேஷ்ராஜனும் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தார்.
அப்போது நாகர்கோவில் சட்டசபை தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிடும் எம்.ஆர்.காந்தி வேட்புமனு தாக்கல் செய்வதற்காக வந்தார். அவருடன் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி பா.ஜனதா வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் வந்தனர்.

அவர்களை கண்டதும் விஜய்வசந்த் வேகமாக பொன்.ராதாகிருஷ்ணன் இருக்கும் இடத்துக்கு சென்றார். இருவரும் கைகளை கூப்பி வணக்கம் தெரிவித்ததுடன் நலம் விசாரித்து கொண்டனர். இருவரும் கைகளை குலுக்கி வாழ்த்துகளை பரிமாறி கொண்டனர்.
கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் பா.ஜனதாவும், காங்கிரசும் நேரடியாக களம் காணும் நிலையில், எதிரும், புதிருமாக உள்ள கட்சிகளின் வேட்பாளர்கள் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டதுடன் ஒருவருக்கொருவர் சிரித்த முகத்துடன் நலம் விசாரித்து வாழ்த்துகளை பரிமாறி கொண்டது அங்கிருந்தவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
இது குறித்து விஜய்வசந்த் தனது ட்விட்டர் பதிவில் கூறிருப்பதாவது