சென்னையில் 424 வேட்புமனுக்கள் ஏற்பு 212 மனுக்கள் நிராகரிப்பு.!

Read Time:1 Minute, 49 Second

தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, தமிழகம் முழுவதும் கடந்த 12-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை வேட்புமனு தாக்கல் நடந்தது. வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நேற்று முன்தினம் நடந்தது. இதில் ஏராளமானோரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. பலரது மனுக்கள் நிறுத்தி வைக்கப்பட்டன.

நேற்று இரவு தாண்டியும் சென்னையில் உள்ளடங்கிய 16 தொகுதிகளில் பெரம்பூர், வில்லிவாக்கம், துறைமுகம், சைதாப்பேட்டை தொகுதிகளுக்கான வேட்புமனு பரிசீலனை பணிகள் முடிவடையாமல் இருந்தது. இந்தநிலையில் அந்த பணிகள் முழுவதும் நேற்று முடிவடைந்தது.

அதன்படி பெரம்பூரில் தாக்கல் செய்யப்பட்டிருந்த 38 மனுக்களில் 22 மனுக்கள் ஏற்கப்பட்டு 16 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. வில்லிவாக்கத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த 44 மனுக்களில் 31 மனுக்கள் ஏற்கப்பட்டு 13 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. துறைமுகத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த 50 மனுக்களில் 35 மனுக்கள் ஏற்கப்பட்டு 15 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. சைதாப்பேட்டையில் தாக்கல் செய்யப்பட்டிருந்த 49 மனுக்களில் 30 மனுக்கள் ஏற்கப்பட்டு 19 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

அந்தவகையில் சென்னையில் 16 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட 636 மனுக்களில் 424 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. 212 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.