76 நாடுகளுக்கு 6 கோடி கொரோனா தடுப்பூசிகள் ஏற்றுமதி!

Read Time:1 Minute, 29 Second

இந்தியாவில் இருந்து 76 நாடுகளுக்கு 6 கோடி கொரோனா தடுப்பூசிகள் அனுப்பப்பட்டிருக்கின்றன. நாடு முழுவதும் 4½ கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன என மத்திய சுகாதார மந்திரி ஹர்ஷவர்தன் தெரிவித்தார்.

சண்டிகரில் உள்ள மைக்ரோபியல் டெக்னாலஜி நிறுவனத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய சுகாதார மந்திரி ஹர்ஷவர்தன் கூறியதாவது:-

‘இன்று காலை வரை, நாடு முழுவதும் சுமார் 4½ கோடி கொரோனா ‘டோஸ்’கள் போடப்பட்டுள்ளன. இந்தியாவில் இருந்து 76 நாடுகளுக்கு 6 கோடி கொரோனா தடுப்பூசிகள் அனுப்பப்பட்டிருக்கின்றன.

கொரோனா தடுப்பூசி போடும் பணியை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும் என்று நமது பிரதமர் மோடியும், பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டாவும் கூறியிருக்கின்றனர். அதை நாம் செயல்படுத்திக்காட்ட வேண்டும்.

ரூ.900 கோடி சிறப்பு நிதி

கொரோனா தடுப்பூசி தொடர்பான ஆய்வுகளை விரைவுபடுத்துவதற்காக ரூ.900 கோடிக்கு மேலான ஒரு சிறப்பு நிதி உருவாக்கப்பட்டுள்ளது என மத்திய சுகாதார மந்திரி ஹர்ஷவர்தன் தெரிவித்தார்.