விஜய் 65-யில் நடிக்க பூஜா ஹெக்டேவுக்கு ரூ.3 கோடி சம்பளம்?

Read Time:1 Minute, 46 Second

மாஸ்டர் வெற்றி படத்துக்கு பிறகு சில வாரங்கள் ஓய்வில் இருந்த விஜய் இப்போது புதிய படத்தில் நடிக்க தொடங்கி உள்ளார். இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்குகிறார். இவர் நயன்தாராவை வைத்து கோலமாவு கோகிலா, சிவகார்த்திகேயன் நடித்து திரைக்கு வர உள்ள டாக்டர் படங்களை இயக்கியவர். இது விஜய்க்கு 65-வது படம்.

இன்னும் பெயர் சூட்டப்படாத இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். தற்போது தெலுங்கு, இந்தி திரை உலகில் பிஸியாக வலம்வரும் இவர் 2012-ல் மிஸ்க்கின் இயக்கத்தில் திரைக்கு வந்த முகமூடி படத்தில் ஜீவா ஜோடியாக அறிமுகமானவர்.

விஜய் 65-யில் கதாநாயகியாக நடிக்க பூஜா ஹெக்டேவுக்கு ரூ.3 கோடி சம்பளம் பேசி இருப்பதாக சமூக வலைத்தளத்தில் தகவல் பரவி வருகிறது. பூஜா ஹெக்டே இதுவரை ரூ.2 கோடி சம்பளம் வாங்கி வந்ததாக கூறப்படுகிறது. தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் ஜோடியாக நடித்து திரைக்கு வந்த முந்தைய படமான அல வைகுந்தபுரமுலூ படத்தில் பூஜா ஹெக்டே ரூ.2 கோடி வாங்கி இருந்தார். ஆனால் விஜய் படத்தில் கூடுதலாக ரூ.1 கோடி கேட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

படப்பிடிப்புக்காக விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் ஜார்ஜியா சென்றுள்ளனர். அங்கு 20 நாட்கள் படப்பிடிப்பு நடத்திவிட்டு சென்னை திரும்புகிறார்கள்.