‘தலைவி’ படம் ரிலீஸ் தள்ளிவைப்பு!

Read Time:2 Minute, 19 Second

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஜே.ஜெயலலிதாவின் சுயசரிதை ‘தலைவி’ திரைபட வெளியீட்டை ஒத்திவைப்பதாக தயாரிப்பாளர் அறிவித்தார்.

மறைந்த முதல்-அமைச்சர் ஜே. ஜெயலலிதா வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகி உள்ள தலைவி படத்தின் படப்பிடிப்பு முடிந்து தொழில் நுட்ப பணிகள் நடக்கின்றன. இந்த படம் வருகிற 23-ந்தேதி திரைக்கு வரும் என்று அறிவித்து இருந்தனர். இந்த நிலையில் கொரோனா 2-வது அலை நாடு முழுவதும் வேகமாக பரவி வருவதால் பல மாநிலங்களில் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.

தலைவி திரைப்படம் வெளியிட தயாராக இருந்தபோதிலும் “படம் பல மொழிகளில் தயாரிக்கப்பட்டுள்ளதால், ஒரே நாளில் அனைத்து மொழிகளிலும் வெளியிட விரும்புகிறோம். ஆனால் கொரோனா முன்னெச்சரிக்கைகள் மற்றும் மீண்டும் ஊரடங்கு உத்தரவு காரணமாக தலைவி வெளியீட்டை ஒத்திவைக்க முடிவு செய்துள்ளோம். கொரோனா தொற்று அடங்கிய பிறகு புதிய ரிலீஸ் தேதியை அறிவிக்க முடிவு செய்துள்ளனர்.

தமிழ்நாட்டில் திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளை மட்டுமே பயன்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் திரைக்கு வர தயாராக இருந்த புதிய படங்களின் ரிலீசை தள்ளி வைக்க படக்குழுவினர் ஆலோசிக்கிறார்கள்.

இந்த படத்தில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரணாவத்தும் எம்.ஜி.ஆர். வேடத்தில் அரவிந்தசாமியும் நடித்துள்ளனர். சமீபத்தில் படத்தின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்றது. கங்கனா ரணாவத் நடிப்புக்கு பாராட்டுகளும் கிடைத்தன. தலைவி படத்துக்கு பெரிய எதிர்பாப்பு உள்ளது.