‘சித்திரம் பேசுதடி’ புதிய தொடரில் லட்சுமி கல்யாணம் புகழ் தீபிகா உற்சாகம்!

Read Time:2 Minute, 22 Second

நடிகை தீபிகா, எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் பட்டதாரியான இவர் பண்ருட்டியை சேர்ந்தவர். தனது கல்லூரி நாட்களிலிருந்தே டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வருகிறார். தீபிகா வார இறுதி நாட்களில் ஒரு சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சியின் மூலம் தனது திரை வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் முழுநேர செய்தி தொகுப்பாளராக மாறினார்.

இறுதியில், விஜய் டிவி ‘லட்சுமி கல்யாணம்’ தொடரின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானார் தீபிகா. அதில் லட்சுமி வேடத்தில் நடித்த அவர் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். மேலும் சில திரைப்படங்களிலும் தீபிகா நடித்துள்ளார்.

தற்போது நடிகை தீபிகா தனது புதிய நிகழ்ச்சியான ‘சித்திரம் பேசுதடி’ மூலம் பார்வையாளர்களை மகிழ்விக்கத் தயாராகி வருகிறார், இந்த தொடரில் பாலின சார்பு மற்றும் பாலின சமத்துவம் தொடர்பான சமூக பிரச்சினைகளைக் கையாள்கிறது. அது குறித்து தனது மகழ்ச்சியை இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார்.

“என் கண்முன்னே சித்திரமாய் ஓடிக்கொண்டிருந்த கனவுகள் ஒவ்வொன்றும் நிஜமாக தொடங்கிவிட்டன “சித்திரம் பேசுதடி ” வாயிலாக… தங்கமயிலின் லட்சியம் நிறைவேற மக்களாகிய உங்கள் ஆதரவும் அன்பும் என்றும் தேவை
Thank you once again Tamizh Dhasan sir siju sir Marketting team Director producer Kavitha Bharathy sir Raju sir Amirtharaj sir Martin sir Saleem sir Anand sir Sujith sir Saravanan sir perumal sir Edward sir Priya mam Promo team nd thanks to all insta pages of chithiram pesudhadi nd my supporters wellwishers .. இனி தினமும் உங்க வீட்டுக்கு வர போறாம் 2.30 மணிக்கு @chithirampesudhadiofficial (sic)”

இந்த தொடரில் தீபிகா ரங்கராஜு (தங்கமாயிலாக), பாபூஸ் பாபுராஜ் (குருமூர்த்தியாக), ஜெயஸ்ரீ (கோமதி), ஷெரின் ஜானு, பூஜா ராம்கி, அபி நவ்யா, சிவ் சதீஷ் (ஜீவா) மற்றும் பலர் இடம்பெற்றுள்ளனர்.